மைத்திரிபால சிறிசேன மகிந்தவிடமிருந்து ஆட்சியைப் பறிக்க வேண்டுமானால் இச் சமன்பாட்டை உடைக்க வேண்டும் என்பது அவசியமானது.
அதனை உடைக்கும் நோக்கிலேயே மைத்திரிபாலவின் பிரச்சாரங்கள் இலங்கையில் நடைபெறுகின்றன. தான் ஆட்சிக்கு வந்தாலும் மகிந்தவையும் அவரது குடும்பத்தையும் பாதுகாப்பேன் என்றும் புலம்பெயர் புலிகளின் கைகளில் பிடித்துக்கொடுக்க மாட்டேன் எனவும் மைத்திரிபால கூறியுள்ளார்.
தமிழ்ப் பேசும் மக்கள் பிரிவினைக்காகப் போராடவில்லை என்றும் பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடுகிறோம் என்றும் சிங்கள மக்களின் ஒடுக்குமுறைக்காகவும் நாம் குரல்கொடுக்கத் தயார் என்றும் சிங்களமக்களுக்குச் சொல்வதன் மூலமே மகிந்தவினதும் மைத்திரிபாலவினதும் பேரினவாதக் கருத்துக்களை அழிக்கமுடியும். அதுவே மகிந்தவின் வெற்றிக்கான சமன்பாட்டை மைத்திரிபால போன்ற இனவாதிகள் உள்வாங்கிக்கொள்வதைத் தடுத்து உரிமைகளை வென்றெடுகவும் முடியும். கவலைக்கிடமாக தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் அரசியல் தலைமை இல்லை. தேசிய வியாபாரிகள் மகிந்தவின் பேரினவாதச் சமன்பாட்டை உயிர்ப்பிக்க தம்மாலான அனைத்தையும் செய்கின்றனர்.