Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நாட்டை ஏமாற்றியதற்கு மன்மோகன் சிங் உடனடியாக ராஜி னாமா செய்ய வேண்டும்: பிரகாஷ் காரத்.

07.09.2008.

புதுடில்லி:

அமெரிக்காவுடனான அணுசக்தி உடன் பாடு விஷயத்தில் இந்த நாட்டையும், நாடாளு மன்றத்தையும் ஏமாற்றியதற்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக ராஜி னாமா செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் வலியுறுத்தினார்.

அமெரிக்காவுடனான அணுசக்தி உடன் பாட்டை செயல்படுத்துவதில் தீவிரமாக இறங்கி யுள்ள மன்மோகன் சிங் அரசு, இந்த உடன் பாட்டை செயல்படுத்தினால் அணு சோதனை நடத்துவது உள்ளிட்ட இந்தியாவின் உரிமைகள் பறிபோகும் என்ற அமெரிக்காவின் நிபந்த னைகள் தெளிவாக தெரிந்திருந்தும் கூட, நாட்டு மக்களிடமும், நாடாளுமன்றத்திலும் அப்பட்ட மாக பொய்கூறியது.

அணு சோதனை நடத்தினால் இந்திய அணு உலைகளுக்கு கிடைத்து வரும் அனைத்து எரி பொருள் சப்ளையும் உடனடியாக ரத்து செய்யப் படும்; இந்திய அணு உலைகளுக்கு பயன்படுத் தப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் இந்தியாவின் உரிமை பறிபோகும் என்பது உள்ளிட்ட விபரங் களை ஏற்கெனவே மன்மோகன் சிங் அரசிடம் தெரிவித்து விட்டோம் என்று அமெரிக்கா பகி ரங்கமாகக் கூறியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் அயல்துறை அமைச்சகக்குழுவிற்கு புஷ் நிர்வாகம் அனுப்பி யுள்ள கடிதமும், உண்மைகளை அம்பலப்படுத் தியுள்ளது. இந்நிலையில், எப்படியேனும் அணுசக்தி உடன்பாட்டை நிறைவேற்றுவதற் காக 45 நாடுகள் கொண்ட அணு வர்த்தக குழு மத்திடமும், மன்மோகன் சிங் அரசு மன்றாடிக் கொண்டிருக்கிறது.

இச்சூழலில் நாடாளுமன்றத்தை உடனடியா கக் கூட்ட வேண்டுமென்று இடதுசாரிக் கட்சி களும், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளும் வற்புறுத்தியுள்ளன. இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை எதிர்வரும் செவ்வாயன்று இடது சாரிக் கட்சிகள், பகுஜன் சமாஜ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளனர்.

அணுசக்தி உடன்பாடு தொடர்பான பிரச் சனை மட்டுமின்றி, ஜம்மு – காஷ்மீர், ஒரிசா ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பதட்டச் சூழ்நிலைமை குறித்து விவாதிக்கவும், உடனடி யாக நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டு மென்று பிரதிபா பாட்டீலை சந்திக்கும் போது, இக்கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்த உள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசின் முன்பு உள்ள ஒரே வழி உடனடியாக இந்த அரசின் பிரதமர் தார் மீகப் பொறுப்பேற்று பதவியிலிருந்து வெளி யேறுவதே என்று கூறினார்.

“நாடாளுமன்றத்தை இவர்கள் கூட்ட மாட் டார்கள்; பதவியிலிருந்தும் வெளியேற மாட் டார்கள்; அப்படியானால் இது ஒரு வெட்கங் கெட்ட அரசு என்றே பொருள்படும் எனக் குறிப்பிட்ட பிரகாஷ் காரத், நாடாளுமன்றத் தைப் பார்த்து ஏன் இவர்கள் அஞ்சுகிறார்கள்? நாடாளுமன்றத்தைப் பார்த்து ஏன் இவர்கள் ஓடுகிறார்கள்? ஜம்மு – காஷ்மீரிலும், ஒரிசா விலும் நிலைமை மோசமாக உள்ள நிலையில், நாடாளுமன்றம் உடனடியாக கூட்டப்பட வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், இந்த அரசு நாடாளுமன்றத்தை முற்றிலும் அவ மதிக்கிறது என்றே பொருள்” என்றும் பிரகாஷ் காரத் சாடினார்.

ஆகஸ்ட் மாதத்தில் கூட்டப்பட்டிருக்க வேண்டிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட் டத் தொடரை அக்டோபர் 17-ம்தேதிக்கு மத்திய அரசு ஏற்கெனவே தள்ளி வைத்துள்ளது என் பது குறிப்பிடத்தக்கது.

மாயாவதி குற்றச்சாட்டு

அணுசக்தி உடன்பாட்டு விஷயத்தில் நாட்டை ஏமாற்றிய மன்மோகன் சிங் அரசு, உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்றும், கூட்டத் தவறினால் இந்த அரசு டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டுமென்றும், உத்தரப்பிரதேச முதலமைச்சரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி கூறி யுள்ளார். இதுதொடர்பாக குடியரசுத் தலை வருக்கு கடிதம் எழுதியுள்ள அவர், இந்திய நாட் டின் வரலாற்றில் முதன்முறையாக நாடாளு மன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நடத்தப் படவில்லை என்றும், மழைக்காலக் கூட்டத் தொடர் தள்ளிப் போடப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்

Exit mobile version