Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நாட்டு மக்களை ஐக்கியப்படுத்தவே தீர்வு! : இலங்கை அமைச்சர்

இலங்கையின் பிரச்சினைக்குத் தீர்வு காணுவதற்கு வேறு எந்த நாட்டினது மாதிரிகளையும் நாம் பின்பற்ற மாட்டோம். அதேபோல் மற்றய நாடுகள் சிபார்சு செய்யும் தீர்வுகளையும் செயற்படுத்த மாட்டோமென மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 11 ஆவது சாதாரண அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.நடந்து முடிந்துள்ள யுத்தத்தில் பாரியளவு மனித உரிமை மீறலகள்; குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன என்பது தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்ற விசேட அமர்வு தேவையற்றதொன்றாகும். இந்த விவாதம் எமக்கு அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் நாம் எமது நாட்டில் அரசியல் பேச்சுக்களின் மூலம் உருவாக்கப்படும் தீர்வையே அமுல் செய்யவுள்ளோம். அதற்கான செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பமாகி விட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் மனித உரிமைகளைப் பேணுவது தொடர்பில் விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர். யுத்தத்தின் போது அப்பாவிப் பொதுமக்கள் மீது கனரக ஆயுதங்கள் பிரயோகிப்பப்படவில்லை எனவும், பொதுமக்கள் பாதுகாப்பை கவனத்திற் கொண்டு யுத்தம் முன்னெடுக்கப்பட்டதனால் இராணுவத்தினருக்கே பாரிய இழப்புக்கள் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வன்னியில் இடம்பெற்ற மோதல்களின் போது இடம் பெயர்ந்தவர்களுக்கான மனிதாபிமான மற்றும் புனர்வாழ்வுப் பணிகளை முன்னெடுத்து இந்த மக்கள் மத்தியில் ஊடுருவியுள்ள பயங்கரவாதி களைக் களையெடுக்க வேண்டிய அவசியமும் தேவையும் அரசாங்கத்திற்கு உண்டெனவும் முன்னாள் விடுதலைப் புலி போராளிகளை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை செயற்படுத்தும் பொருட்டு தனது அமைச்சின் அனுசரணையில் நிபுணத்துவக்குழு ஒன்று விசேட திட்டத்தை வகுத்து வருகின்றதெனவும், நாட்டு மக்கள் சகலரையும் ஐக்கியப்படுத்தி பிரிவினைக்கு புத்துயிர் கொடுத்து அது மீண்டும் தலையெடுக்கவிடாது தடுப்பதை இலக்காகக் கொண்டே இத்திட்டம் வகுக்கப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Exit mobile version