மகிந்தவின் அரசாங்கம் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்த தயாராகி வருவதாக அறியமுடிகிறது. காட்டுச் சட்டம் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுவரும் சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொள்ளை, கொலை, குற்றச்செயல்கள் ஆகியவை காரணமாக மக்கள் மத்தியில் வெறுப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவே அரசாங்கம் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்த முயற்சிக்கிறது. நான்கு வருட காலமாக நிர்வாகத் திறன்மின்மை, தோல்விகளை மூடிமறைத்து இரத்த வெறியை ஊட்டி கைதட்டல்களைப் பெறவே அரசாங்கம் இதனைச் செய்யத் திட்டமிட்டுள்ளது.
பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிடுவதாகக் காட்டிக்கொண்டு கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் வெள்ளைவான் கொலைக் கலாசாரத்தை ஆரம்பித்து அதனை விடுதலைப் புலிகளுக்கெதிரான போராட்டத்தின் அங்கமாக அரசாங்கம் காட்டியது.
விடுதலைப் புலிகள் அல்லாத மக்களுக்கு இரத்தத்தை ஊட்டி தனது புகழைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட அரசாங்கம், யுத்த நிகழ்ச்சித் திட்டத்தில் சகாக்களாகப் பயன்படுத்திக் கொண்ட குற்றவாளிகளை பாதாள உலக ஒடுக்குமுறை என்ற பெயரில் கொலை செய்தது. கடந்த காலத்தில் இவ்வாறு 91 பேர் கொலை செய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
மகிந்தவின் இரத்தக் கலாசாரத்தில் இவர்கள் பலியாகினர். இரத்த வாடை தற்போது முடிவடைந்து வரும் நிலையில், தற்போது மரண தண்டனையை அமுல்படுத்த முயற்சித்துவருகின்றனர்.
நாட்டில் தற்போது இருப்பது இரத்தத்தினால் போசிக்கப்பட்ட பேய்களின் அரசாங்கமே. போதைப்பொருள் வியாபாரம் தொற்றுநோயாக மாறியுள்ளது. அரச பதவிகளையும் அதிகாரத்தையும் பயன்படுத்தியே இந்த வியாபாரம் நடைபெறுகிறது. இந்த வியாபாரத்தை ஒடுக்கும் தேவை காவல்துறையினருக்கு இருந்த போதிலும், அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
நாட்டில் சட்டம் செயற்படுத்தப்படாத சந்தர்ப்பத்தில் யாருக்காக மரண தண்டனை சட்டம் அமுல்படுத்தப்படுகிறது. ஜனாதிபதியின் தேவைக்காக மாத்திரம் காவல்துறையினர் செயற்பட்டுவரும் நாட்டில் அரசாங்கத்தைஅசௌகரியத்திற்கு உள்ளாக்கும் எதிராளிகள் எந்த அதிகாரமும் அற்ற ஏழை மக்களுக்கு எதிராக இந்த மரண தண்டனை அமுல்படுத்தப்படலாம்.
அரசாங்கத்தின் அனுசரணையோடு கொலைகளைச் செய்யும் நபர்களுக்கு ஒருபோதும் இந்த மரண தண்டனை உரித்தாகப் போவதில்லை. தற்போது இலங்கையில் புதிய வகுப்பு முறை ஏற்பட்டிருக்கின்றது. இது கால்மாக்சின் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட வகுப்புமுறையல்ல. அதிகாரத்தை தக்கவைப்பதற்காக மேற்கொள்ளப்படும் ராஜபக் வகுப்புவாதமே.
தற்போது நாட்டில் மூன்று வகுப்பு வாதங்கள் நடைமுறையில் உள்ளன. ராஜபக்ச குடும்பம், அந்தக் குடும்பத்தின் உறவினர்கள், 110 அமைச்சர்கள் அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
இவர்களின் உறவினர்கள் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களாகவும் காவல்துறை மா அதிபர், சட்டமா அதிபர் போன்ற அரசியல் நியமனங்களும் ராஜபக்ச குடும்பத்தினருக்காக செயற்பாடுகளை மேற்கொள்ளும் ஊடகவியலாளர் வகுப்புக்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்தச் சட்டம் எவ்விதத்திலும் அழுத்தங்களை ஏற்படுத்தப் போவதில்லை.
இரண்டாவது வகுப்பினராக முன்னணி தொழிற்சங்க வாதிகள், வைத்தியர்கள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள், அரசாங்கத்துடன் நேரடியாக தொடர்புபட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நடுநிலையான ஊடகவியலாளர்கள், இவர்களுக்கெதிராக ஒருமட்டத்தில் சட்டத்தை செயற்படுத்த முடியும்.
இந்த நடவடிக்கையானது பழிவாங்கும் நடவடிக்கையாகும். பின்னணி மற்றும் சேவையாற்றும் பத்திரிகையைப் பழிவாங்குவதாகும். இவர்கள் முதல் வகுப்பினருடன் மேற்கொள்ளும் எதிர்ப்பு நடவடிக்கைகளை நிறுத்தப்படும்.
காலம்வரையிலேயே அவர்களுக்கு இவ்வாறான நிலைமை ஏற்படும். மூன்றாம் வகுப்பைச் சேர்ந்த 80 வீதமானோர் தமது வாக்குகளை எந்தக் கட்சியினருக்கோ ஆதரவாக பயன்படுத்தும். அரசியலில் சம்பந்தப்படாதவர்களும், மிகவும் கடினமான வாழ்க்கையைக் கொண்டு நடத்தும் சாதாரண மக்களும் ஆவர்.
இரண்டாம் வகுப்பினருக்கு எதிராக செயற்பட்டால், அது மூன்றாம் வகுப்பினரைப் பாதிக்கும். இந்த மூன்றாம் வகுப்பிலேயே நான் இருக்கின்றேன். மரண தண்டனை அமுல்படுத்தப்படுமானால் அது மூன்றாம் வகுப்பினரான எமக்கு மாத்திரமே அமுல்படுத்தப்படும். அவசரமாக பேசுவதற்கு பசில் ராஜபக்ஸவின் தொலைபேசி இலக்கத்தை வைத்திருந்தால் நிபுண ராமநாயக்க என்ற மாணவனைப் போன்று ஓரளவு உயிரைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
நிபுண ராமநாயக்க என்ற மாணவன் இரண்டாம் வகுப்பு நிலையிலேயே இருக்கிறார். முதலாம் வகுப்பு அமைச்சர் ஒருவரை அறிந்துவைத்திருந்ததால் அவர் தப்பிக்கொண்டார். மரண தண்டனை அமுல்படுத்தப்படுமானால் மூன்றாம் வகுப்பைச் சேர்ந்தவர்களே கொல்லப்படுவர் எனவும் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.