Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நாட்டில் சட்டம், ஒழுங்கு உடைத்தெறியப்பட்டுள்ளது. வேதனையான ஓர் கால கட்டத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம்!:முன்னாள் பிரதம நீதிபதி.

 saratd  நாட்டின் சட்டம், ஒழுங்கு உடைத்தெறியப்பட்டுள்ளது எனவும், வேதனையான ஓர் காலகட்டத்தில் நாட்டு மக்கள் தற்போது வாழ்ந்து வருதாக முன்னாள் பிரதம நீதிபதி  சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அரசியல் சாசனத்தின் பல சரத்துக்கள் உதாசீனம் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் சட்டம் ஒழுங்கு உடைத்தெறியப்பட்டுள்ளது. இது மிகவும் ஓர் வேதனையான நிலை.

அரசியல் சாசனத்தின் அனைத்து சரத்துக்களையும் நேர்மையுடன் பாதுகாக்க வேண்டியது நாட்டின் சகலரதும் தலையாய கடமையாகும். ஒவ்வொரு அதிகாரியும், கிராம உத்தியோகத்தர், காவல்துறை உத்தியோகத்தர் முதல் ஜனாதிபதி வரையில் அனைவரும் அரசியல் சாசனத்திற்கு கட்டுப்பட்டு செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியல் சாசனத்தை முழுமையாக பாதுகாப்பதாக கூறியே பிரதம  நீதிபதிடம் ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்துகொள்கிறார். எவ்வாவெறினும், இதில் எத்தனை சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன, எத்தனை சட்டங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. நல்ல குடிமக்கள் நாட்டின் அரசியல் சாசனத்திற்கு கட்டுப்பட்டு செயற்பாடுவார்கள் எனவும் சரத் என் சில்வா மேலும் குறிப்பிட்டார்.

Exit mobile version