நாட்டின் வளங்களை அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
தேர்தல் காலங்களில் நாட்டு வளங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது என வலியுறுத்தி வந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம், பல முக்கிய சொத்துக்களை அரசாங்கத்திற்கு விற்பனை செய்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
மிகவும் குறைந்த விலைக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டின் முக்கிய சொத்துக்களை அபகரித்து வருகின்றது.
படைவீரர்களினால் மீட்கப்பட்ட பூமியை மக்களுக்கு வழங்காது, அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்த்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
வெளிநாட்டு பிரஜைகளுக்கு காணி விற்பனை செய்யும் போது அறவீடு செய்யப்படும் வரிகளும் அறவீடு செய்யப்படுவதில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.