இனப்பிரச்சினை தீர்வுக்காக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்திவரும் அரசாங்கக் குழுவின் தலைவரான அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே பலமுறை இவ்வாறான கருத்தை அரசாங்கத்தரப்பினர் வெளியிட்ட போதும் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் தொடர்ந்தது.
எனினும் அரசாங்கப் பிரதிநிதிகள் புறக்கணித்த, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஒன்று கூடலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சென்றுள்ள நிலையிலும், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் எம் கிருஸ்ணா இலங்கைக்கு வரவுள்ள நிலையிலும் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று லக்பிம செய்திதாளுக்கு இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.