Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நாச்சியப்பனும் சுப்பிரமணிய சுவாமியும் விக்னேஸ்வரனுக்கு வாழ்த்து

subramanian-swamyதேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழ் கூட்டமைப்பு கட்சிக்கு, தமிழக அரசியல் கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று, மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார். ராணிப்பேட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சுதர்சன நாச்சியப்பன், இலங்கையில் தமிழர்களின் நலனுக்காக மத்திய அரசு 85 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி செய்துள்ளது என்றும், அதற்கான திட்டப்பணிகள் மத்திய அரசின் நேரடி பார்வையிலேயே நடைபெற்று வருகிறது என்றும் கூறியுள்ளார்.

அங்கு தமிழக கூட்டமைப்பு கட்சி வெற்றி கண்டிருப்பது, அகதிகளாக வெளியில் இருக்கும் தமிழர்கள் மீண்டும் சொந்த நாடு திரும்ப ஏதுவாக அமைந்து உள்ளது என்றும் கூறியுள்ளார்.

தமிழக அரசியல் கட்சிகள், இலங்கையில் வெற்றி பெற்ற தமிழக கூட்டமைப்பு கட்சிக்கு அதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ள அவர், மத்திய அரசு, இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்கு தேவையான அத்தனை உதவிகளையும் செய்யும் என்றும் கூறியுள்ளார்.

ஈழத் தமிழர் தன்னுரிமைக்கான போராட்டத்தில் தலையிடும் வேண்டாத விருந்தாளிகளில் சுதர்சன நாச்சியப்பனும் ஒருவர். இந்திய உளவுத்துறையின் கூட்டாளியான ஈ.என்.டி.எல்.எப் உம் நாச்சியப்பனும் இணைந்து ஈழப் பிரச்சனையில் இந்தியாவைத் தலையிடக் கோரும் கூட்டம் ஒன்றை அண்மையில் டெல்லியில் நடத்தியது தெரிந்ததே. இலங்கையில் இந்திய இராணுவம் தலையிடு உட்பட அனைத்தையும் நியாயப்படுத்தும் நாச்சியப்பன், தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தைப் பயங்கரவாதம் என அழைப்பவர். தவிர, தமிழ் நாட்டில் வசிக்கும், சமூகவிரோதக் கருத்துக்களைச் சுதந்திரமாகப் பேசிவருபவரான சுப்பிரமணியம் சுவாமி என்ற இந்து அடிப்படை வாதியும் விக்னேஸ்வரனுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய அரசியலையும் அதன் எதிரணியையும் இந்திய அரசபயங்கரவாதம் முழுமையாகக் கையகப்படுத்தியுள்ள அவலம் நாச்சியப்பனூடாகவும் சுவமி ஊடாகவும் ஒலிக்கின்றது.

Exit mobile version