Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நாசா கருவிகளுடன் நிலவுக்கு செல்லும் சந்திராயன் -1.

21.10.2008.

நிலவுக்கு முதன்முறை யாக இந்தியா அனுப்பும் சந்திராயன் – 1 விண்கலத் தில் நிலவில் உள்ள தாது ஆதாரங்கள் மற்றும் நில வின் துருவப் பகுதிகளில் உள்ள பனி கட்டிகளை கண்டறியும் நாசா கருவி கள் இடம் பெற்றுள்ளன.

ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திராயன் – 1 விண்கலம் புதன்கிழமை (அக். 22) காலை 6.20 மணிக்கு விண் ணில் ஏவப்படுகிறது.

முதலில் பூமியை சுற் றும் இந்த விண்கலம் பின் னர் நிலவை நோக்கி பய ணிக்கிறது.

அடுத்தடுத்து இயக்கப் படும் மோட்டார்கள் மூலம் சந்திராயன் விண் கலம் 3 லட்சத்து 87 ஆயி ரம் கி.மீ. தொலைவுக்கு செலுத்தப்படும். சந்தி ராயன் விண்கலம் நிலவின் வட துருவத்திற்கு 100 கி.மீ. தொலைவு வரை செல்லும்.

பின்னர் நிலவின் ஈர்ப்பு விசையுடன் ஒருங்கி ணைக்கப்படும்.

நிலவுப் பயணத்திற்காக பிஎஸ்எல்வி ராக்கெட் டிற்கு எரிபொருள் நிரப் பும் பணி நிறைவடைந் துள்ளது.

சந்திராயன் விண்கலத் தில் அமெரிக்க விண் வெளி ஆய்வு நிறுவன மான நாசாவின் 2 முக்கிய கருவிகள் உள்ளன. இது குறித்து நாசா நிர்வாகி மைக்கேல் கிரிபின் கூறு கையில் சந்திராயன் – 1 விண் கல பயணம் மிக முக்கிய மான அறிவியல் கண்டு பிடிப்புக்கு உதவும் என்றார்.

Exit mobile version