Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நாங்கள் சிங்களம். நானும் சிங்களவன். அதனால் கேட்டுக்கொண்டு இரு, தமிழா!

நாங்கள் சிங்களம். நானும் சிங்களவன். அதனால் கேட்டுக்கொண்டு இரு, தமிழா. தலைதெறித்து நடந்துகொள்ளாமல்…. கேட்டுக்கொண்டு இருக்க முடியாவிட்டால் போ என இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக் நேற்று (01.04.10) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தமிழ் மக்களைப் பார்த்து பகிரங்கமாக திட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று (01.04.10) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி டெலிபுறம்டர் இயந்திரத்தைப் பார்த்து தமிழை உச்சரித்து வாசித்துக் கொண்டிருந்த போது, அவரது தமிழைப் புரிந்துகொள்ள முடியாத யாழ் மக்கள், கூச்சலிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஜனாதிபதி மகிந்த தமிழர்களைப் பார்த்து திட்டியுள்ளார்.

ஜனாதிபதி சிங்களத்தில் திட்டியபோது அதனையும் புரிந்துகொள்ளாத தமிழ் மக்கள் தொடர்ந்தும் கூச்சலிட்டதால், மீண்டும் நான் நிறுத்த மாட்டேன். நீங்கள் சத்தம் போடப் போட இன்னும் இன்னும் நான் தமிழில் பேசத்தான் போகிறேன் என வீராப்பாக கூச்சலிட்டுள்ளார்.

இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளர் ஒருவர் ஒலிவாங்கியை எடுத்து மக்களை அமைதிப்படுத்த முயற்சித்துள்ளார். மகிந்த ராஜபக் இவ்வாறு தமிழ் மக்களை இன ரீதியாக திட்டிக் கொண்டிருந்த போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதனை அருகில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.

இந்தத் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றுவதற்கு முன்னர் நாகவிகாரைக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அதன் பின்னர் நல்லூர் கந்தசுவாமி கோயிருக்குச் சென்றிருந்தார்.

நன்றி : உலக தமிழ் செய்திகள்

Exit mobile version