Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நாங்கள் ஏன் தனித் தமிழ் ஈழம் வேண்டும் என்று கேட்கிறோம் : கருணாநிதி

“தனித் தமிழ் ஈழம் கேட்கின்ற போராட்டத்தில், பயங்கரவாதமோ, தீவிரவாதமோ தலையிடக் கூடாது என்கிற கருத்தை உடையவன் நான். என்னைத் தலைவராகக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகமும், அதே கருத்தைக் கொண்டது. நாங்கள் பயங்கரவாதத்திற்கு தயாராக இல்லை. தமிழ் மக்களின் உயிருக்கும், உடமைக்கும் எதிராக, இலங்கையில் சிங்களர்களால், கடந்த காலத்தில் நடத்தப்பட்ட கொடுமைகளும், எதிர்காலத்தில் நடத்தப்படுமென்று எதிர்பார்க்கின்ற கொடுமைகளும், நடைபெறக் கூடாது என்பதற்காகத் தான், நாங்கள் தனித் தமிழ் ஈழம் வேண்டும் என்று கேட்கிறோம். இந்தியாவில் இருக்கின்ற மத்திய அரசு, இலங்கை அரசைப் போல தமிழர்களைக் கொடுமைப்படுத்தவில்லை. தமிழர்கள், இங்கே நிம்மதியாகத் தான் இருக்கிறார்கள். அதனால், இந்திய அரசை விட்டுப் பிரிந்து போகவேண்டிய அவசியம் இப்போது இல்லை.”
என்று கருணாநிதி தெரிவித்தார். முதலில் ஈழத்தில் மக்கள் சாரி சாரியாகக் கொல்லப்பட்ட போது தமிழ் நாட்டில் போராடியவர்களை அழித்ததை கருணாநிதி மறந்தாலும் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். இரண்டாவதாக இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் அழிக்கப்படுவதற்கு இலங்கைப் பேரினவாத அரசுகளுக்கு பின்பலமாக அமைவதே இந்திய அரசு தான் என்பதை தமிழ் நாட்டு அரசியல் வியாபாரிகள் மறுத்தாலும் மக்கள் புரிந்துகொண்டுள்ளார்கள்.

இன்று ஜெயலலிதா தமிழின நாடகம் நடத்தும் வேளையில் அதற்கு எதிர் நாடகத்தை கருணாநிதி தனது பாணியில் முன்வைப்பதைப் மக்கள் இலகுவாகவே புரிந்து கொண்டுள்ளனர்.

Exit mobile version