Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நாங்களும் ஹம்பாந்தோட்டையில் முதலீடு செய்யவேண்டும் : அமரிக்கா பிடிவாதம்

us-lankaஇலங்கையில் அதிகளவு முதலீடு செய்வதற்கு விரும்புவதாக அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஹம்பாந்தோட்டைக்கு விஜயம் செய்திருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள சகல முயற்சிகளும் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
எந்தத் துறைகளில் முதலீடு செய்ய சந்தர்ப்பம் காணப்படுகின்றது என்பதனை அறிந்து கொள்ள விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஹம்பாந்தோட்டையில் முதலீடு செய்ய விரும்புவதாக தூதுவர் சிசன் தெரிவித்துள்ளார்.
அமரிக்காவின் அக்கறை மனித் உரிமையோ, அடிப்படை ஜனநாயகமோ அல்ல என்பதை வெறு வகையில் அமரிக்க தூதுவர் சொல்லிவைத்திருக்கிறார்.
இவற்றையெல்லாம் தெரிந்திருந்தும், அமரிக்கா இலங்கைக்கு எங்காவது ஒரு இடத்தில் ‘ஆப்பு’ வைத்து காப்பாற்றிவிடும் என மக்களை நம்பவைத்து ஏமாற்றுகிறார்கள்.

Exit mobile version