மீன்தொழிலையும் மீனவர்களையும் பாதிக்கும் கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மைச் சட்டத்தை எதிர்த்து மாநிலம் முழுவதும் உள்ள மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதன்கிழமை யன்று நாகர்கோவிலில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டனர்.
இந்த முற்றுகைப் போராட்டத்துக்கு கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிப் பணிக்குழு அமைப்பாளர் அருட்தந்தை சூசை ஆண்டனி தலைமை வகித்தார். மீன் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் ஜி. ஜெலஸ்டின், விளவங்கோடு எம்எல்ஏ ஜாண்ஜோசப், திருவட்டாறு எம்எல்ஏ லீமாரோஸ் உள்ளிட்ட தலைவர்கள் மீனவர்களை பாதிக்கும் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி உரையாற்றினர். இந்தப் போராட்டத்தில் நூற்றுக் கணக்கான பெண் கள் உள் பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர்.