தனது வர்த்த நலன்களையே குறியாகக் கொண்ட ரஷ்ய அரசு ஆர்பாட்டக்காரர்களை நடுத்தெருவில் விட்டுள்ளது. ஆரம்பத்தில் அவர்களுக்கு ஆதரவளிப்பதான தோற்றப்பட்டை வழங்கினாலும் இன்று அவர்களின் போராட்டங்களை தனது வர்த்த நலன்களுக்கான பேச்சுவார்த்தைகளுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்கிறது.
ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அரசுகளால் ஆதரிக்கப்படும் நவ நாசிகள் ஹிட்லரின் சின்னங்களை வெளிப்படையாகப் பயன்படுத்தித் தெருக்களில் உலவருகின்றனர். நாசிகளை 20 வருடங்களுக்கு மேலாக அமெரிக்க அரசு ஊட்டி வளர்க்கிறது.
உக்ரெயினின் மேற்கு ஆதரவு நாசிகள் ஐரோப்பியப் பிரதேசத்தில் நிறவெறியை வளர்ப்பதற்கும் எதிர்கால சந்ததியை பாசிச நச்சூட்டுவதற்கும் ஐரோப்பிய அதிகாரவர்க்கத்தால் பயன்படுத்தப்படலாம். மீள முடியாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள மேற்கு நாடுகள் தமக்கு எதிரான போராட்டங்களைத் திசைதிருப்ப நாசிகளைப் பலப்படுத்தும் தந்திரோபாயத்தை வழமை போலக் கடைப்பிடிக்கலாம்.