தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சிறப்புச் சட்டவிலக்குகளைப் பாதுகாப்பாகக் கருதி சங்கீதாவிற்கு மாதாந்த,ம் 400 டொலர்கள் மட்டுமே ஊதியமாக வழங்கியுள்ளார். வாராந்தம் ஆறு நாட்களுக்கு மேல் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வரை வேலை செய்ததற்கு தேவயானி வழங்கிய மாதாந்த ஊதியம் 400 டொலர்கள்.
அமெரிக்கச் சட்டப்படி ஒரு மணி நேரத்திற்கான ஆகக்குறைந்த அடிப்படைச் ஊதியம் 19.19 டொலர்களாகும். தனது வீட்டில் சட்டவிரோதமாக விதிகளை மீறி வேலைக்கமர்த்தப்பட்ட சங்கீதாவிற்கு வழங்கப்பட்ட மணி நேர ஊதியம் பல மடங்குகள் குறைவானது.
இதனை சட்டரீதியாக சங்கீதா எதிர்கொள்ள முற்பட்ட வேளையில் தேவயானியை அமரிக்க போலிஸ் கைது செய்தது.
இதனைத் தொடர்ந்து இந்திய அரசாங்கம் தனது ஆதரவாளர்களுடன் பல வழிகளில் தேவயானிக்கு ஆதரவாக தனது அமரிக்க எஜமானனுக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தது. இந்த அடிப்படையில் தேவயானி விடுதலை செய்யப்பட, அவர்மீது எந்த விசாரணையும் நடத்தாமல் சங்கீதாவையும் அவரின் குடும்பத்தையும் அழிக்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.
அமரிக்காவில் தொழிலார்கள் போராடிப்பெற்ற உரிமைகளை அமரிக்காவில் வதியும் இந்தியர்கள் பெற்றுக்கொள்வதைக்கூட சகித்துக்கொள்ள முடியாத இந்திய அரசும் அதன் கூட்டாளிகளும் இந்திய அதிகாரவர்க்கத்தின் ஒடுக்குமுறையின் குறியீடு. இந்தியாவின் உள்ளேயே தொழிலாளர்கள் எப்படி அடிமைகளாகப் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதற்கு தேவயானி விவகாரம் சிறந்த உதாரணம்.