Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நவநீதம் பிள்ளை ஓய்வு பெற்றார்

U.N. High Commissioner for Human Rights Pillay smiles before a special session of the Human Rights  Council in Genevaஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தனது பதவியிலிருந்து ஓய்வுபெற்றார். 2008 ஆம் ஆண்டு ஜீலை மாதம் மனித உரிமை ஆணையாளராகப் பதவியேற்ற நவநீதம் பிள்ளை தென்னாபிரிக்க இந்தியத் தமிழர். வெள்ளை நிறத்தவரல்லாத் தென்னாபிரிக்காவின் முதல் பெண் நீதிபதி.

இலங்கையில் இனவழிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை ஆணையாளராகப் பதவி வகித்தவர். தமக்குத் தேவைப்படும் போதெல்லாம் சிறிய விடையங்களுக்குக்கூடத் தலையீடு செய்யும் ஐ.நா இலங்கையில் சாரி சாரியாக மக்கள் அழிக்கப்படும் போது கண்டன அறிக்கைகளுடன் நிறுத்திக்கொண்டது.

இலங்கை இனவழிப்பின் ஊடாகப் பயணித்த நவி பிள்ளையின் ஐ.க்கிய நாடுகள் சபை வாழ்க்கை ஆறு வருடங்கள் நீடித்தது. இன்னும் போர்க்குற்ற விசாரணை நடைபெற்று ராஜபக்ச அரசு தண்டிக்கப்படும் என்கிறார் நவி பிள்ளை.

Exit mobile version