இலங்கையில் இனவழிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை ஆணையாளராகப் பதவி வகித்தவர். தமக்குத் தேவைப்படும் போதெல்லாம் சிறிய விடையங்களுக்குக்கூடத் தலையீடு செய்யும் ஐ.நா இலங்கையில் சாரி சாரியாக மக்கள் அழிக்கப்படும் போது கண்டன அறிக்கைகளுடன் நிறுத்திக்கொண்டது.
இலங்கை இனவழிப்பின் ஊடாகப் பயணித்த நவி பிள்ளையின் ஐ.க்கிய நாடுகள் சபை வாழ்க்கை ஆறு வருடங்கள் நீடித்தது. இன்னும் போர்க்குற்ற விசாரணை நடைபெற்று ராஜபக்ச அரசு தண்டிக்கப்படும் என்கிறார் நவி பிள்ளை.