நன்னடத்தை விதிகளின் கீழ் தன்னை விடுவிக்கக் கோரிய நளினியின் மனு தமிழக அரசால் நிராகரிக்கப்பட்டதோடு அவரது சிறை அறையில் இருந்து செல்போன்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் நளினி தன்னை உணவில் விஷம் வைத்து கொல்ல சிறைக்குள் சதி நடப்பதாக அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டு ஒன்றை கூறி சிறைத்துறை டி.ஜி.பி க்கு கடிதம் எழுதினார். தமிழக அரசு இப்புகார் தொடர்பாக விசாரிக்க சிறைத்துறை டி.ஜி.பி இந்திராஜ் தலைமையில் குழு ஒன்றை அமைத்து அறிக்கை கோரியிருந்தது. அக்குழு இன்று தன் விசாரணை அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்தது. இக்குழின் அறிக்கை குறீத்து அதிகார பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில் நளினியை சென்னையில் இருக்கிற புழல் சிறைக்கு மாற்றுமாறு இக்குழு ப்ரிந்துரைத்திருப்பதாகத் தெரிகிறது.