Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நளினியைப் பரோலில் விடுதலை செய்ய ஜெயலலிதா அரசு மறுப்பு

nalini43சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை பரோலில் விடுவிக்க வேலூர் சிறைக் கண்காணிப்பாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.22 ஆண்டுகளாக சிறையில் உள்ள நளினி, தனது வயதான தந்தையை பார்த்து கொள்ளவதற்காக, ஒரு மாதம் பரோலில் செல்ல அனுமதியளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்திருந்தார்.அதனை விசாரித்த நீதிபதிகள் ராஜேஸ்வரன், பிரகாஷ் ஆகியோர் நளினியின் மனு மீது பதிலளிக்குமாறு வேலூர் சிறைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டிருந்தனர்.அதன்படி, வேலூர் சிறை கண்காணிப்பாளர் கருப்பண்ணன், உயர் நீதிமன்றத்தில் இன்று பதில் மனு தாக்கல் செய்தார். வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் கருப்பண்ணனோ தன்னுடைய பதில் மனுவில் நளினியின் தந்தை ஆரோக்கியமாகவே இருப்பதாகவும் அவரை கவனித்துக்கொள்ள மனைவியும் மகனும் உடனிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
தவிரவும் அம்பலவாணபுரம் மலைகளுக்கு நடுவே அமைந்திருக்கின்றது. அந்த அளவில் கைதி ஒருவரை அங்கே நீண்ட நாட்கள் தங்கவிடுவது விரும்பத் தக்கதல்ல.
நாடாளுமன்றத்தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் அவரை சந்திக்க முற்படலாம், அதனால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் உருவாகலாம்.
அவரை பரோலில் விடுவித்தால், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என சிறைக் கண்காணிப்பாளர் கருப்பண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
2003ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை சிறையில் பல்வேறு போராட்டங்களில் நளினி ஈடுபட்டதாகவும், கண்காணிப்பாளர் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை மற்றும் நன்னடத்தை அதிகாரி ஆகியோரும் நளினியை பரோலில் விடுவிக்க பரிந்துரை செய்யவில்லை.நளினியின் தந்தை சங்கர நாராயணன் தற்போது நெல்லையில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மனுதாரரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பும் உள்ளது. இது தவிர, மனுதாரருக்கு உத்தரவாதம் அளிப்பதற்கு யாரும் முன்வரவில்லை. அதனால் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Exit mobile version