நல்லூர் கந்தன் ஆலைய வருடாந்த உற்சவம் விரைவில் வர இருக்கிறது. இவ்விழா தொடர்பான சில முக்கிய முடிவுகள் யாழ் மேயர் யோ.பற்குணராசா தலையில் நேற்று நடந்தது. அக்கூட்டத்தில் தென் பகுதியிலிருந்து வரும் பக்தர்களுக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்வது குறித்தும் இன்னும் பல விஷயங்களும் ஆலோசிக்கப்பட்டது. அதில் முக்கியமான விஷயமாக தமிழ் பெண்களின் மரபான உடையென்று ஆண்களால் தீர்மானிக்கப்பட்ட சேலை, தாவணி,நீளப்பாவாடை சட்டை மட்டுமே அணிந்து நல்லூர் கந்தன் உற்சவத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று இதை மீறி ஜீன்ஸ், சுடிதார், அரைக்கால் சட்டை அணிந்து வந்து தமிழ் பெண்களின் பாரம்பரீயத்தையே இழிவு செய்பவர்களை அனுமதிக்க முடியாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை நாடெங்கிலும் உள்ள நாளிதழ்களில் விளம்பரமாக வெளியிடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போரால் பாதிக்கபப்ட்டு ஒரு இனமே தூண்டாடப்பட்டு கிடக்கிற நிலையிலும் இந்த பிற்போக்கு வாதிகளின் இரக்கமாற்ற கோட்பாடுகள் தமிழ் பெண்களை இழிவாக நடத்தவே துணை போகும் என்பது உறுதி.