Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நரேந்திர மோடியை சந்திக்கிறார் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் நான்சிபவல் : பாசிஸ்டுகளுக்கு ஆதரவு

Gujarat-Narendra-Modiபிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கு விசா வழங்குவதை அமெரிக்கா பல ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருந்தது. மோடிக்கு, கடந்த 2005ம் ஆண்டு, விசா வழங்குவதற்கு அமெரிக்கா தடை விதித்ததை தொடர்ந்து, ஐரோப்பிய யூனியன் நாடுகள், பிரிட்டன் ஆகியவையும் மோடிக்கு விசா வழங்க தடை விதித்திருந்தன. ஆனால், மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன் அந்த நாடுகள் அந்த தடையை வாபஸ் பெற்றுக் கொண்டன.

தற்போது இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் நான்சிபவல் , நரேந்திரமோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு குஜராத், காந்திநகரில், வரும் 14 அல்லது 15 தேதிகளில் நடக்கும் என்று அமெரிக்க தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இனப் படுகொலையாளிகளையும், நாஸிகளையும், பாசிஸ்டுக்களையும் அமெரிக்க அரசு ஊக்குவிக்கிறது. உக்ரெயினில் நாசிக்கட்சிகளை அமெரிகா ஊக்குவித்து வளர்க்கிறது. முஸ்லீம்களுக்கும், வெளிநாட்டவர்களுக்கும், வெள்ளை நிறத்தவர் அல்லாதோருக்கும் எதிராக வெளிப்படையாகவே செயற்பட்டுவரும் கட்சிகளை அமெரிக்க அரசு ஆதரிது வளர்க்கிறது. இலங்கையில் ராஜபக்சவை வளர்த்ததில் அமெரிக்காவின் பங்கு பிரதானமானது. இவ்வாறான பாசிசக் கொள்கையுடையோரை வளர்க்கும் அமெரிக்க அரசு, பின்னதாக அவர்களுக்கு எதிராகப் மனித உரிமையை வளர்க்கிறோம் என்ற அடிப்படையில் நாடுகளில் தலையிட்டு அவற்றை இராணுவமயப்படுத்தி உள்நாட்டின் அரசுகளைப் பலவீனமடையச் செய்கின்றன. இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் ராஜப்கசவான நரேந்திர மோடியின் வருகை அமெரிக்க அரசின் திட்டத்திற்கு வரப்பிரசாதம். அமெரிக்காவை மையமாகக் கொண்ட பல்தேசிய வியாபார நிறுவனங்களும், ஊடகங்களும் நரேந்திர மோடியை ஆதரிக்கின்றன. முசோலினியின், ஹிட்லர் போன்றோரின் கொள்கையால் ஆட்கொள்ளப்ப்பட்ட உலகின் பயங்கரமான அரசியல் வாதிகளுள் ஒருவரான மோடி தெற்காசியாவின் அபாயம்.

அமெரிக்க தூதர் சந்திப்பு குறித்த அறிவிப்பை தொடர்ந்து, பா.ஜ.,வின் வெளிநாட்டு தொடர்பு அமைப்பாளர் சந்திரகாந்த் படேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அமெரிக்க அரசின் இந்த முடிவை நாங்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். இந்த முடிவால், இந்திய-அமெரிக்க நட்புறவு மேலும் வலுவடையும்,’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version