Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நந்திக் கடல் பிரதேசங்களில் ஆயுதங்கள் : பிரதி பொலிஸ் மா அதிபர்

புதுக்குடியிருப்பு சிவந்தபுரம் மற்றும் நந்திக் கடல் பிரதேசங்களில் நிலத்துக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நவீன ரக ஆயுதங்கள் பலவற்றை மத்திய பிரதேச புலனாய்வு மற்றும் தகவல் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர், என இலங்கைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 29ஆம் திகதி இவ்வாறு மீட்கப்பட்ட ஆயுதங்களில் ஸ்னைப்பரில் பொருத்தும் இரு ஆயுதங்களும் மற்றும் 75 கிலோ கிராம் நிறையுடைய வெடிபொரு ட்களும் இவ்வாறு மீட்கப்பட்டதாக மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்தார்.
புலிகள் அமைப்பைச் சேர்ந்த உயர்மட்ட தலைவர் ஒருவரிடம் இருந்து பெற்ற தகவலை அடுத்தே இந்த உபகரணங்கள் கைப்பற்றப்பட்டது. ‘சி.4’ ரகத்தைச் சேர்ந்த 35 கிலோ வெடிபொருட்களும், ரீ. என். ரீ. வெடிபொருட்கள் 15 கிலோ கிராமும் 10 கிலோ கிராம் நிறைகொண்ட 15 குண்டுகளும் டெட்டனேட்டர் 21 ஆகியனவற்றையும் புலனாய்வுப் பிரிவினர் மீட்டிருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version