இன்றைய உலகின் ஊடக சுந்திரத்திற்கான போராட்டத்தின், கருத்துச் சுதந்திரத்திற்கான போரட்டத்தின், பல்தேசிய வியாபார ஊடகங்களுக்கு எதிரான போராட்டத்தின், ஏகபோகங்களின் திட்டமிட்ட அறிவின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் உலகளாவிய சின்னமாக விளங்கும் ஜூலியன் அசாஞ்சின் நத்தார் வாழ்த்துச் செய்தி அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் உலகத்திற்கு புதிய உத்வேகத்தைத் தருகின்றது.
அவதூறுகள், போலிக் குற்றசாட்டுக்கள், கொலை மிரட்டல், பயங்கரவாத அச்சுறுத்தல் போன்ற அனைத்துக்கும் முகம்கொடுத்த ஜூலியன் அசாஞ் இன்று ஆறாவது மாதமாக எக்குவடோர் நாட்டின் பிரித்தானிய தூதரகத்தில் அரசியல் அகதியாக வாழ்கிறார். உண்மையை உரைக்கும் அனைவரும் எதிர்கொள்ளும் அனைத்தையும் நேரடியாகவே எதிர்கொண்ட அசாஞ்சின் நத்தார், புதுவருட உரை ஒடுக்கப்படும் மக்களுக்கானது.