Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நடேசன், புலித் தேவன் உட்பட அனைவரையும் கொலைசெய்ய உத்தரவு பிறப்பித்தது கோதாபாய ராஜபக்க்ஷவே!

kodaஇராணுவத்தினரிடம் சரணடையவதற்கு வந்த விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் மற்றும் புலித்தேவன் உள்ளிட்ட குழுவினரை மே மாதம் 18ம் திகதி பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரிலேயே சுட்டுக்கொன்றதாக இராணுவத்தின் உட்தரப்புத் தகவல்ககளின் அடிப்படையில் லங்காநியூஸ்வெப் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தகவல்களுக்கமைய, மே 18ம் திகதி அதிகாலை 58வது படைப்பிரிவின் அந்நாள் கட்டளைத் தளபதியாக இருந்த பிரிகேடியர் ஷவிந்திர சில்வாவை தொலைபேசியில் தொடர்கொண்ட பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, போர்க் கைதிகளை வைத்துக்கொள்வது அரசாங்கத்திற்கு தேவையற்றவிடயமெனவும் வெள்ளைக் கொடியுடன் அல்லது சரணடைய வரும் எந்தவொரு தரப்பினரையும் தராதரம் பாராது சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதனடிப்படையில் 18ம் திகதி பிற்பகல் பரந்தன் – முல்லைத்தீவு வழியாக இராணுவத்தினரிடம் சரணடைவதற்கு வெள்ளைக் கொடியுடன் வந்த நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஸ் உள்ளிட்ட குழுவினர் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தி சுட்டுக்கொன்றுள்ளனர்.

மேலும் சர்வதேச அமைப்பொன்றும், வெளிநாட்டு தூதரகமொன்றும் இணைப்புப் பணிகளை மேற்கொண்டு பாதுகாப்புச் செயலாளர், வெளிநாட்டமைச்சின் செயலாளர், ஜனாதிபதி சிரேஷ;ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு அறிவித்த பின்னரே புலித்தேவன், நடேசன் உள்ளிட்ட குழுவினர் இராணுவத்தினரிடம் சரணடையச் சென்றுள்ளனர்.

இதே வேளை சரணடைவிற்கான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்ட சந்திரநேரு எம்.பீ உடனான இனியொருவின் கலந்துரையாடலின் போது, அவர் மட்டுப்படுத்தப்பட்ட தகவல்களையே எமக்கு வழங்கியிருந்தார். இலங்கை அரச தரப்பு அச்சுறுத்தலை மீறி முழுமையான தகவல்களை வெளியிட்டால் தான் தொடர்ச்சியான அரசியலில் ஈடுபட தடையாயிருக்கும் என மேலும் தெரிவித்தார்.

Exit mobile version