Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நடுத் தெருவில் பெண் ஒருவரை மிருகத்தனமாகத் தாக்கும் பிரஞ்ச்சுப் போலீஸ் : காணொளி

french_policeஐரோப்பவில் நிற வெறியூட்டப்பட்ட அரச படைகளுள் பிரஞ்ச்சு போலிஸ் குறிப்பிடத்தக்கது. மூன்றாமுலக நாடுகளின் போலிஸ் படைகளைப் போன்று பொதுவெளிகளில் காரணமின்றி வெளி நாட்டவர்களைத் தாக்குவது அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது… வதிவிட உரிமை கோரி அமைதிப் போராட்டம் நடத்திய பெண்களையும் குழந்தைகளியும் மிருகங்களை போன்று இழுத்துச் சென்ற பிரஞ்சுப் போலிசின் காணொளி அதிர்ச்சிய ஏற்படுத்திய சில நாட்களுக்கு உள்ளாகவே கறுப்பினப் பெண் ஒருவரை நடுத்தெருவில் மிருகத்தனமாகத் தாக்கும் பிரஞ்சுப் பொலிஸ்காரனின் கீழ்வரும் காணொளி வெளியாகியுள்ளது.

ஆபிரிக்க நாடுகளையும் மக்ரேபியன் நாடுகளையும் சுரண்டுவதற்காகக் குத்தகைக்கு எடுத்துக்கொண்ட பிரஞ்சு நிறவாத அரச படைகள் அல்ஜீரிய சுந்ததிரப் போராட்டத்தின் போது 1961 ஆம் ஆண்டு அமைதியான ஊர்வலத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. பாரிசின் புற நகர்ப் பகுதியில் நடைபெற்ற இத் துப்பாக்கிச் சூடுச் சம்பவத்தில் 200 அல்ஜீரியர்கள் கொல்லப்பட்டனர். 27 வருடங்கள் சம்பவத்தை நிராகரித்து வந்த பிரஞ்சுப் போலிஸ் படைகள் 1988 ஆம் ஆண்டில் 40 அல்ஜீரியர்கள் மட்டுமே உயிரிழந்தனர் என்று அறிவித்தது.
இன்றும் பிரான்சில் எழும் போராட்டங்களை ஒடுக்குவதற்காக நிறவாதத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது பிரஞ்சு ஏகாதிபத்தியம்.

கீழ் வரும் காணொளி வெளியான பின்னர் காரைச் செலுத்டிவந்த பெண் போதையிலிருந்தார் என போலிஸ் தரப்புத் தெரிவிக்கிறது. மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும் நட்ட ஈடு வழங்க வேண்டும் என்று எழும் கோரிக்கைகளைப் பிரஞ்சுப் போலிஸ் கண்டுகொள்ளவில்லை.
உள்துறை அமைச்சோ தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம் என்கிறது.

Exit mobile version