வன்னி மக்களை கொன்றொழித்த இலங்கை அரசு தன் கொலை முகத்தை மறைக்க தமிழ் நாட்டு சினிமா நடிகர்களை வலை வீசிப் பிடித்து அவர்களை வைத்து போரால் பாதிக்கப்பட்ட மக்களை போக்குக்காட்டி வருகிறது. ராஜபட்சேவின் விருதினராக இலங்கை சென்ற கேரள நடிகை அசின். முகாம்களுக்குச் சென்று பொதுச் சேவை செய்ததாகவும் பலருக்கு தான் கண்சிகிச்சைக்கு உதவியிதாகவும் கூறி வந்தார். தமிழகத்தில் எழுந்த எதிர்ப்புகளின் அரசியல் நோக்கங்களை கணக்கில் எடுக்காத அசின். எதிர்ப்பவர்களை ஏளனம் செய்தார். இது தொடர்பாக தமிழ் சினிமாவிலும் தமிழகத்திலும் அவருக்கு எதிர்ப்பு உள்ள நிலையில் அசின் ராஜபட்சே மனைவியுடன் சென்று வன்னி முகாமில் கண் சிகிச்சை அளித்ததாக கூறப்பட்ட வன்னி மக்களில் 10 பேருக்கு பார்வை முழுமையாக பறி போய் விட்டது என்று மே-17 இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் ‘’ அசினின் செய்ததாகச் சொன்ன மருத்துவ முகாமில் சிகிச்சைப் பெற்ற 10 பேருக்கு பார்வை முற்றிலுமாக பறிபோய் உள்ளது. இன்னு் பலர் வெவ்வேறு சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளனர். அசின், இந்தி படப்பிடிப்புக்காக இலங்கை சென்றது தவறு. அசின் படங்களை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய தமிழ் பிலிம் சேம்பர் அனுமதிக்கக் கூடாது.படப்பிடிப்புக்கு இலங்கை செல்லும் நடிகர்நடிகைகளின் படங்கள் தென் இந்தியாவில் திரையிடப்படமாட்டாது என திரைப்படக்கூட்டுக்குழு அறிவித்தது. அதை மீறி அசின் இலங்கை சென்று வந்துள்ளார். எனவே ரெடி படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது.இந்தி நடிகர் விவேக் ஓபராயும் இலங்கை சென்று வந்துள்ளார். அவரது ரத்த சரித்திரம் படத்தையும் தென் இந்தியாவில் ரிலீஸ் செய்ய அனுமதிக்கக்கூடாது, என்றார்.அசின் சென்னைக்கு வந்தால் கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிவரும் என்றும் அவர் தெரிவித்தார்.