Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நடிகர் ஜெயராம் வீடு மீது கடுமையான தாக்குதல் நாம் தமிழர் இயக்கத்தினர் கைது.

நடிகர் ஜெயராம் மலையாளப் படம் ஒன்றில் வீட்டு வேலை செய்யும் தமிழ் பெண்களை கழுத்து தடித்த எருமைகள் என்று இழிவு படுத்தி கூறியதாகத் தெரிகிறது.

. இது தமிழகத்தில் சில அமைப்பினரிடமும் சில பெண்களிடம் கடும் கொதிப்பை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கான இந்திய அளவிலான சங்க மாநாட்டிலும் நடிகர் ஜெயராமாற்கு கடும் கண்டனம் தெறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜெயராம் வீட்டிற்குள் நுழைந்த முப்பது பேர் கொண்ட இளைஞர்கள் அவரது வீட்டுக்கு தீ வைத்தனர். ஆவேசமாக அவர்கள் ஜெயராமிற்கு எதிராக கோஷமிட்டனர். அவர்களை விரட்டிச் சென்று பிடித்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையிலடைத்தனர். அவர்கள் இயக்குநர் சீமான் அவர்களின் நாம் தமிழர் இயகத்தினர் என்று தெரிகிறது. பொதுவாகவே ஈழத் தமிழர் கோரிக்கையில் தோற்றுப்பொனதான ஒரு உணர்வு தமிழகத்தில் பல தரப்பினரிடமும் நிலவும் நிலையில் இம்மாதிரி யாராவது பேசும் போது அவர்களுக்கு எதிராக இந்த இளைஞர்களின் கோபம் திரும்பி விடுகிறது. ஒரு வகையில் இதற்காக மத்திய மாநில அரசுகள் வெட்கப்பட வேண்டும். அதே வேளையில் கருணாநிதிக்கு திரயுலகம் நடத்தும் பாராட்டு விழாவில் கலந்து கொள்ளாத நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கபப்டும் என்று அறிவித்துள்ள பெப்ஸி போன்ற சினிமா சங்கங்களின் மனித உரிமை மீறலான இந்த அறிவிப்புகளுக்கு எதிரகவும் தமிழார்வலர்கள் போராடினால் ந்ல்லது.

Exit mobile version