வீடு தாக்கப்பட்டது தொடர்பாக இயக்குனர் சீமான் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வன்முறையை தூண்டியதாக சீமான் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயராம் வீடு தாக்கப்பட்டது தொடர்பாக ‘நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மேலும் தாக்குதல் நடைபெறாமல் இருக்க ஜெயராம் வீட்டுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே தாக்குதலை தடுக்க தவறியதாக கூறி வளசரவாக்கம் காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை இனப்படுகொலைகளின் பின்னர் தமிழகத்தில் மலையாளிகளிற்கு எதிரான உணர்வு தமிழ்த் தேசியவாதிகளிடையே மேலோங்கி வருவது குறிப்பிடத்தக்கது.