உடற்கூற்றியல் சோதனை ஒன்றை நடத்துவதற்காக மரணித்தவரின் வயிற்றுப் பகுதியின் மாதிரி ஒன்றை கொழும்பு மருத்துவ மனைக்க்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்.பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கும் நிலையில் இவரது மரணம் நிகழ்ந்துள்ளது. அச்சத்தின் மத்தியில் வாழும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் இந்த மரணம் மேலும் உயிர்ப்பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே வேளை இலங்கை அரசிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவுப் பிரச்சாரங்களை புலம்பெயர் அரச ஆதரவு மாபியாக் குழுக்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ளன.