நகர்ப்புற ஏழைகளுக்கு இலவச குடியிருப்பு நிலம்:மேற்கு வங்க அரசு அறிவிப்பு
இனியொரு...
மேற்குவங்கத்தில் நகர்ப்புறத்தில் வாழக்கூடிய ஏழைகளுக்கு அவர்கள் ஏற்கெனவே குடியிருக்கும் அரசு புறம்போக்கு நிலங்களை அவர்களுக்கே வழங்குவது என்று மேற்குவங்க அரசு முடிவெடுத் துள்ளது.
சுமார் 4 லட்சம் பேர் உடனடியாக இதனால் பல னடைவார்கள். இதேபோல் 25 நகராட்சிகளில் இதே திட்டத்தின் அடிப்படையில் குடியிருப்பு நிலங்கள் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.
மேலும் குடிசைகளை அகற்றி வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கு அரசு குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக கடன் வழங்குவது என்றும் முடிவெடுத் துள்ளது.
இந்த அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான மேற்குவங்க இடதுமுன்னணி அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அசோக் வெளியிட்டுள்ளார்.
மேற்குவங்க நகர்ப்புற ஏழைகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கை அளிக்கக்கூடிய இந்தத்திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.