இலங்கையில தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் செறிந்து வாழும் மத்திய மலை நாட்டின் தலவாக்கலை கல்கந்த தோட்டம் அன்றைய தினங்களில் மிகவும் பரப்பரப்பாக காணப்பட்டது தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புக்களான லயம் என்று அழைக்கப் படும் தொடர் குடியிருப்புக்கள் சில தீக்கிரையாகி பல குடும்பங்கள் அணிய மாற்று ஆடை கூட இல்லாமல் தோட்டப்பாடசாலையில் தங்க வைத்திருந்தனர். அவர்களின் அடிப்படைத் தேவைகளான உணவு உடை மற்றும் பல அடிப்படை வசதிகளை வழங்குவதில் தோட்ட இளைஞர்கள் மிகவும் மும்முரமாய் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் இந்த இளைஞர்பட்டாளம் அடிக்கடி உச்சரித்த பெயர் சந்திர குமார். எதை கேட்டாளும் குமார் அண்ணாவிடம் கேளுங்கள் சந்திர குமார் தோழரிடம் கேளுங்கள் என்று கூறியதும் செய்தி சேகரிப்பாளனாக அங்கு சென்றிருந்த எனக்கு இவர்களை வழி நடத்தும் அந்த இளைஞன் சந்திர குமார் என்பது தெளிவானது. சிறந்த கரைப்பந்தாட்ட வீரன் கவிஞன் சிறந்த பேச்சாளன் சமூக சேவகன் என பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட அவர் பத்தனை சிரிபாத கல்வியியற் கல்லூரியில் பயிற்சி பெற்று தலவாக்கலைப் பிரதேசத்தில் பல முற்போக்கான செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக அறிந்திருந்தேன். அவரைப்பற்றி கேள்விப்பட்டிருந்த எனக்கு அந்த இளைஞனை சந்திக்க கிடைத்த நாள் மறக்க முடியாத நாளாகும்
தலவாக்கலை கல்கந்த தோட்டத்தில் தொழிலாளர் தம்பதியினரான பெருமால் தியாகமனி தம்பதியினரின் மூத்த புதல்வனான சந்திர குமார் தொடர்பான ஞாபகங்களை இன்றும் நாம் மீட்டிப்பார்க்க வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கின்றது. ஏனெனில் மண்ணிற்கு பாதுகாப்பு வழங்குவதற்காய் மேல் கொத்மலை நீர் தேக்கத்திற்கு எதிரான போராட்டங்களின் போது தலைமைதாங்கிய எமது தோழன் மூளைக் காய்ச்சல் என்னும் கொடிய நோய் காரணமாக தான் நேசித்த அந்த மண்ணில் விதைக்கப்பட்டு இன்றுடன் 06 வருடங்கள் பூர்த்தியடைகின்றது. இந்தகாலக்கட்டத்தில் 2011.11.11.ஆம் திகதி சந்திர குமாரின் 42 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் ஞாபக மீட்டலுக்காக இந்தக் கட்டுரை வரையப்படுகின்றது.
தோழர் சந்திர குமாரின் இறுதி மரண ஊர்வலத்தை புதிய ஜனநாயக கட்சி முழுமையாக முற்போக்கான முறையில் நடத்தியதுடன் அவரது முதலாவது நினைவு வருடத்தினை முன்னிட்டு செவ்வரும்பு நினைவு மலரையும் வெளியிட்டது .
தோழரின் வாழ்க்கையின் பாதையினை நோக்கும் போது இலக்கியம் என்றால் பேராசிரியர் கைலாசபதியையும் அரசியல் என்றால் மாவோசேதுங்;கையும் தலைமையென்றரால் சே குவெராவையும் நம்பிக்கையென்றால் கார்ல் மார்கசையும் ஆசான் என்றால் பேராசிரியர் சிவசேகரததினையும்; மாதிரியாகக் கொண்டு பயணம் செய்ததற்கு இவர் படைத்த ஆத்திசூடி சான்றாக காணப்படுகின்றது
இவர் இயற்றிய ஆத்திச்சூடியில்
அரசியல் செய்
ஆயுதம் பயில்
இயக்கம் செய்ய ஈடுபாடு கொள்(மார்க்சிய இயக்கம்)
உரிமைகளை வெல்ல
ஊர்களைத் திரட்டு………….
வீரனாய் இருக்க
வெட்டி பேசாது எம்முள்
வேற்றுமை ஒழி
வையகம் காக்க
ஸ்டாலினைப் பின்பற்று. என்று எழுதியுள்ளார்.
தோழர் குமாரின் சிரார்த்த தினத்தினை முன்னிட்டு கல் கந்தை தோட்ட இளைஞர் யுவதிகள் வருடம் தோறும் சந்திரகுமார் ஞாபகார்த்த வெற்றிக் கேடய கரைப்பந்தாட்ட போட்டியினை நடத்தி வருகின்றனர். உண்மை யாதெனில் தோழர் ஆரம்பித்த சங்கத் தமிழ் மன்றமும் தான் சார்ந்திருந்த அமைப்பின் கொள்கைகளும் அடுத்த தலைமுறையினரை சரியான பாதையில் வழிநடத்தியதுமே என்றால் மிகையாகாது.1999 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட சந்திர குமார் புதிய ஜனநாயக கட்சிக்காக பல ஆயிரம் வாக்குகளைப் பெற்றார் என்பது வரலாற்று சான்றாகும். மலையகத்தின் பம்மாத்து அரசியல் தலைமைகள் பின்னால் அடிமைகளாகவும் அடிவருடிகளாகவும் காட்டிக் கொடுப்பவர்களாகவும் சுற்றி வரும் மலையக படித்த சமூகம் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் நயவஞ்சகர்களின் மத்தியில் மாற்று அரசியலுக்காய் வித்திட்ட சந்திர குமாரின் இழப்பு மலையகத்திற்கு பேரிழப்பாகும் ஒரு மார்க்சிய கட்சி சிறந்த தலைவனை இழப்பதென்பது ஈடு செய்ய முடியாததாகும் மொத்தத்தில் நான் யார் யாரால் மாற்று அரசியலுக்குள் ஈர்க்கப் பட்டேனோ அந்த தோழர்களில் ஒருவரை இழந்த வடு இதயத்தில் ஆறாத ரணமாக இன்று வரை பதிந்துள்ளது.
மலர் விழி தனது கணவனையும் ரக்சிகா தனது தந்தையையும் பெற்றோர்கள் தங்களின் மகனை யும் சகோதரன் அண்ணனையும் இழந்து துன்புற்று இருக்கும் போது இன்று தோழர் சந்திர குமாரை நாங்கள் நினைக்கின்றோம் என்றால் அது மானுடன் ஒருவன் அதி மானுடனாய் வாழ்ந்ததன் காரணத்தினால் மட்டும் தான்;.
தாங்கள் இறந்ததன் பின் தங்களைப் பற்றி இந்த சமூகம் நிணைத்து பார்க்க வேண்டும் என்பதுடன் தான் வாழ்ந்த காலத்தில் இந்த சமூகத்திற்காய் தன்னால் என்ன என்ன செய்யப்பட வேண்டும் என்பதனை சந்திர குமாரின் மரணம் எங்களுக்கு கற்றுத்தந்த பாடமாகும்
சி.சிவசேகரத்தின் பேனையிலிருந்து தோழர் சந்திர குமாருக்காய்
ஒரு நல்ல தோழரின்
ஒவ்வொரு நற்பணியும்
இன்னும் பல நூறு தோழர்களை உருவாக்கும்
அவர் செய்த பணிகளின் கனமோ
ஏத்தனையோ மலைகள் பெறும் எனவும்
சி.கா.செந்தில் வேலின் சிந்தனையில் இருந்து தோழர் சந்திர குமாருக்காய்
எந்த இலட்சியங்களுக்காக தனது வாழ்வை அர்த்தப் படுத்தினாரோ அதை நோக்கி உறுதியுடன் பயணிப்பதும் துக்கத்தை பலமாக மாற்றி முன்னோக்கி செல்வதுமே நாம் அவருக்கு செலுத்தும் புரட்சிகர அஞ்சலியாகும் எனவும்
இ.தம்பைய்யா தனது இதயத்தில் இருந்து தோழர் சந்திர குமாருக்காய்
தோழர் சந்திர குமார் கடும் சுகவீனம் காரணமாக நம்மை விட்டு நிரந்தரமாய் பிரிந்து விட்டார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் துயரமும் அடைந்தோம் ஒரு சிறந்த தோழரை எமது கட்சியும் மலையகமும் தாங்க முடியாத சோகமானதாகும்.எனவும்
சிவ ராஜேந்திரனின் அனுபவத்தில் இருந்து தோழர் சந்திர குமாருக்காய்
அவர் ஒரு கம்மியுனிஸ்ட் முழுநாட்டினதும் சர்வதேச பாட்டாளி வர்க்கத்தினதும் முன்னணிப் போராளி.எனவும்
சோ.தேவராஜாவின் எழுது கோலில் இருந்து தோழர் சந்திர குமாருக்காய்
நாட்டை மட்டுமன்றி உலகத்தையே வழிநடத்தியவர் பாட்டாளி வர்க்க குணாம்சம் கொண்டவர் எனவும்
லெனின் மதிவானத்தின் சந்திர குமார் பற்றிய பதிவுகள் இவ்வாறு பதியப்பட்டுள்ளது
தோழர் சந்திர குமார் செயற்பாடுகளுக்கு வியூகம் அமைக்கும் வகையில் ஓர் உழகை;கும் மக்கள் நலன் சார்ந்த இயக்கத்தில் புதிய ஜனநாயக கட்சி தம்மை இணைத்தக் கொண்டு செயற்பட்டவர் எனவே சந்திர குமார் என்பது வெறும் நாமம் மட்டும் அல்ல இயக்க சக்தி.என்கிறார்
சாமிமலை வே.இராமர் தனது அக்கினிக் குஞ்சுகள் என்னும் கவிதையில்
செஞ்சட்டையணிந்து
தீரமுடன் நீ நடந்த போது
அடக்கு முறையும்
ஒடுக்கு முறையும்
உன்னிடம் தோற்றபோதும்
மரணத்தை வென்று விட்ட
மா மனிதனடா நீ
என்று பாடியுள்ளார்
(‘செவ்வரும்பு’ தோழர் சந்திர குமார் நினைவு மலரில் இருந்து)
இன்று சுய நல சாக்கடையில் மூழ்கி மாண்டு போய்க் கொண்டிருக்கும் மலையக புதிய தலைமுறையினருக்கு தோழர் சந்திர குமாரின் கல்லறையிலே பொறிக்கப் பட்டுள்ள கல்லறை வாசகமான
‘வீரர்கள் போராடுவார்கள்
கோழைகள் பின் வாங்குவார்கள்
துரோகிகள் காட்டிக் கொடுப்பார்கள்’
என்னும் வார்த்தைகளாவது வாழ்வின் அர்த்தத்தினை புரிய வைக்கும் என்ற எண்ணனத்தில் என்றும் தோழர் சந்திரகுமாரின் ஞாபகங்களுடன்………….
சை.கிங்ஸ்லி கோமஸ்