Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தோழர் ஆசாத் கொலை ஆந்திராவிடம் போய்க் கேளுங்கள்- சிதம்பரம் திமிர்.

மேற்கு வங்காள மாநிலம் லால்கர் நகரில் பேரணி நடத்தி, பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய ரெயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, ‘’ஆந்திராவில் என்கவுண்டர் மூலம் மவோயிஸ்டு தலைவர் ஆசாத் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி விசாரணை நடத்த வேண்டும்’’என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.நேற்று பாராளுமன்றத்தில் போபால் விஷ வாயு தொடர்பான விவாதத்தின் போது இதுபற்றி பாஜக எம்.பி. யஸ்வந்த் சின்கா கேள்வி எழுப்பினார். அவர், ‘’ஆசாத் என்கவுண்டர் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று உங்கள் மந்திரி (மம்தா பானர்ஜி) கேட்டு இருக்கிறாரே?’’என்று கேட்டார்.இதற்கு பதில் அளித்த உள்துறை அமைச்சர் .சிதம்பரம், ’’சட்டம்ஒழுங்கை பாதுகாப்பது அந்தந்த மாநிலத்தைப் பொறுத்தது. ஆசாத் என்கவுண்டர் பற்றி விசாரணை வேண்டுமானால் நீங்கள் ஆந்திராவுக்கு சென்று அந்த மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி விசாரணை கேளுங்கள். என் அதிகாரத்துக்கு உட்பட்டு ஏதாவது ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள் நான் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். எந்த சட்டத்தின் கீழ் மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட முடியும்? என்று சொல்லுங்கள்’’ என்று தெரிவித்தார்.

Exit mobile version