முன்னதாக அமரிக்க இராணுவத்தினரை வானூர்தியில் தரையிடக்கிய பின்னர் படையினர் ஒசாமா தங்கியிருந்ததாகக் கருதப்படும் கட்டடத்தினுள் சென்றுள்ளனர் அங்கிருந்து திரும்பியவர்களை மீண்டும் அதே வானூர்தி ஏற்றிக்கொண்டு மேலெழுந்துள்ளது. உடனடியாகவே அது நிலத்தில் விழுந்து பெரும் தீப்பிழம்பாக எரிந்துள்ளது. பின்னதாக மனித உடலின் பாகங்களை மட்டுமே காணக்கூடியதாக இருந்ததாக அவர் தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார். ஆக, ஒசாமா பின்லாடன் மீதான அத்தனை நடவடிக்கைகளையும் இது கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது. இது குறித்த எந்தக் கருத்தையும் அமரிக்க ஊடகங்கள் எதுவும் வெளியிடவில்லை. அதே வேளை கடந்த வாரம் அமரிக்க ஜனாதிபதி கருத்துத் தெரிவிக்கையில் ஒசாமா பின்லாடன் கொல்லப்படும் முன்னர் அவர் அந்தக் கட்டிடத்தினுள் இருந்தாரா என உறுதிப்படுத்த முடியாதிருந்தது எனத் தெரிவித்திருந்தார்.
அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டதாக தொலைக்காட்சி சாட்சி கூறுகிறது.