1. தேர்தலை மட்டுமே இலக்குவைத்து சுய நிர்ணைய உரிமை பற்றிப் பேசப் போகிறீர்களா?
2. அவ்வாற்ன்றெனின் சுய நிர்ணைய உரிமையை வென்றெடுப்பதற்கான உங்கள் அரசியல் திட்டம் என்ன?
3. இலங்கையில் உள்ள தேசிய இனங்கள் எவை, அவற்றின் சுய நிர்ணைய உரிமைக் தொடர்பான உங்கள் நிலைப்பாடு என்ன?
4. இலங்கை அரசால் ஒடுக்கப்படும் சிங்கள மக்களைச் சுய நிர்ணைய உரிமைக்கு ஆதரவாகத் மாற்றுவதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்.? -அதுவே இலங்கை அரசைப் பலவீனப்படுத்தும் தந்திரோபாயமாகவும் அமையும்-
5. அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் சுய நிர்ணைய உரிமைக் கோரிக்கைக்கு எதிரானவையே. அதனை வெற்றிபெற்றவர்களும் உண்டு. அவ்வாறாயின் அதனை வெற்றிகொள்ள உங்கள் வேலைத்திட்டம் என்ன?
சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை மொழி வழித் தமிழ்த் தேசியம் என்ற கருத்தாக மாற்றி இனவாதமாகக் உருமாற்றி உலகம் முழுவதும் தங்கள் வெறுப்பைச் சம்பாதித்துத் கொண்ட கருத்து இன்று வடகிழக்குத் தமிழர்கள் மத்தியிலும் வெறுப்பை உருவாக்கியுள்ளது.
தேர்தல் முடிவுகள் இதனையே தெரிவிக்கின்றன. வெறுமனே உணர்ச்சிவசப்படுத்துவதற்கான சுலோகங்களை நிராகரித்து பிரிந்து செல்லும் உரிமைக்கான அரசியல் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட வேண்டும்.
இலங்கையில் பிரிவினை தடைசெய்யப்பட்டுள்ளதே தவிர, பிரிந்து செல்லும் உரிமை என்பது உலகில் உள்ள அனைத்துத் தேசிய இனங்களதும் ஜனநாயக உரிமை. ஆக வட-கிழக்குத் தமிழர்கள் பிரிந்து செல்லும் உரிமைக்கான கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டும். தவிர, பிரிவினை கோரிப் பிரச்சாரம் செய்பவர்கள் சிங்களப் பெருந்தேசியக் கட்சிகளே என்ற பொது அபிப்பிராயம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும். இக் கட்சிகளே சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஜனநாயக உரிமை நிராகரித்து அவர்களை பிரிவினை கோரும் நிலையை நோக்கி அழைத்துச் செல்கின்றன.