Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தொழிலாளர் வாழ்நாள் வேகமாக குறைந்து வருகிறது. முதலாளிகளுக்கு அமோக ஆயுசு.

தொழிலாளர்களை விட முதலாளிகள் மற்றும் தொழில் அதிபர்கள் அதிக நாள் உயிர் வாழ்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. லண்டனில் உள்ள புள்ளி விவர ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் அன்றாடம் பணி செய்யும் ஒரு தொழிலாளி 65 வயதுக்கு முன்னர் இறப்பது அதிகமாக உள்ளதாகக் கூறுகிறது. இது முதலாளிகள் 65 வயதுக்கு முன்னர் இறப்பதை ஒப்பிடும் போது மிக அதிகமாக உள்ளது. 2001-ம் ஆண்டு இந்த இடைவெளி 2 மடங்காக இருந்தது. 2008-ம் ஆண்டு இது 2.3 மடங்காக அதிகரித்தது. இப்போது இந்த விகிதம் மேலும் அதிகரித்துள்ளது. உடல் நலத்தைப் பொறுத்தவரையும் தொழிலாளர்கள் மற்றும் வருவாயில் பின் தங்கியவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த ஆய்வை மேற்கொண்ட .என்.எஸ். நிறுவனத்தின் தலைவர் மியெர் கிளிக்மேன் கூறுகையில், “இந்த ஆய்வின் மூலம் உடல் நலம் மற்றும் இறப்பு விகிதம் குறித்து தெளிவான தகவல்கள் தெரிய வந்துள்ளன. சமூக ஏற்றத்தாழ்வுகளை கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்த ஆய்வு முடிவுகள் பயனுள்ளதாக அமையும்என்றார். சுகாதாரம் மற்றும் தொழில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், “சில குறிப்பிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் உடல் நலம் பாதிக்கப்படுவதுடன் அவர்களுக்கு போதுமான பாதுகாப்பும் இல்லாத நிலை நிலவுகிறது. அந்தந்த நிறுவனங்களே பொறுப்பேற்றுக் கொண்டு தொழிலாளர்களின் நலனுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்என்றார்.

Exit mobile version