இவ்வாறான ஒரு முறைமை ஏற்கனவே காணப்படுவதால் பாதுகாப்பிற்கான சேமிப்புப் பணம் என்பது மத்தியதர வர்க்கத்தின் கீழணிகள் மத்தியில் காணப்படுவதில்லை. தீபம் தொலைக்காட்சியின் தொழிலாளர்கள் இந்த சமூக உதவித்தொகையைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத அவல நிலைக்கு அதன் ‘தமிழ் உணர்வு மிக்க’ நிர்வாகம் தள்ளியுள்ளது.
தீபம் தொலைகாட்சி இலங்கை அரச சார்பு எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் புதிய தலைமுறை தொலைக்காட்சி, மற்றும் விஜை தொலைகாட்சி போன்ற தமிழகத்தின் கலைக் குப்பைகளின் தரகுகளாக செயற்படத் தீர்மானித்த பின்னரே தொழிலாளர்களை தெருவிற்குத் துரத்தியது. இதனால் அது தற்காலிகமாகச் செயற்பாடுகளை நிறுத்திவிட்டு தொழிலாளர்களுக்கு வேலை நீக்கக் உத்தரவை வழங்கவில்லை. வேலை நீக்கப்பத்திரமின்றி பிரித்தானிய அரசிடம் சமூக உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கக்கூட இயலாத நிலையில் தொழிலாளர்கள் நடுடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்களின் நாளந்த வாழ்க்கை கேள்விக்குள்ளாகியுள்ளது.