Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க மறுத்த ஷோபா சக்தி, லீனா மணி மேகலை கைது?

தமிழகத்தின் ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை இலங்கை அகதிகள் தொடர்பாக செங்கடல் என்ற ஆவணப்படத்தை இயக்கி வருகிறார். ஒரு பிரபல தயாரிப்பாளரின் நிதி உதவியில் இப்படம் தயாராகிவருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக ராமேஸ்வரம் பகுதியில் இந்த ஆவணப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. இப்படத்திற்கு திரைக்கதை எழுதியிருக்கும் ஷோபா சக்தி எனப்படும் ஈழத்து எழுத்தாளரும் ராமேஸ்வரத்தில் முகாமிட்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே படபிடிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒளிப்பதிவாளர், அவரது உதவியாளர், ஆகியோருக்கு பேட்டா வழங்கவில்லையாம். அவர்கள் அதை ஆவணப்படத்தின் மேனேஜர்கள் வெங்கட், தனுஷ், படத்தின் இயக்குநர் லீனா மணி மேகலையிடம் கேட்ட போது ஒளிப்பதிவாளரையும் அவரது உதவியளரையும் அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடும் கோபமடைந்த தொழிலாளர்கள் கேமிராமேன் கனி, வெங்கட் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு படப்பிடிப்புக் குழுவினருடன் விவாதித்திருக்கின்றனர். இந்நிலையில் ஒளிப்பதிவாளர்களுக்கு ஊதியம் வழங்க மறுத்ததால் அவர்கள் படம் பிடித்த கேசட்டை எடுத்துக் கொண்டு ரமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்குக் கிளம்பியிருக்கின்றனர்.

ஆனால் அப்படிக் கிளம்பியவர்களை லீனா மணிமேகலை, ஈழத்து எழுத்தாளரும் முற்போக்கு அறிவு ஜீவியுமான ஷோபா சக்தி, படத்தின் மேனேஜர்கள் தனுஷ் ஆகியோர் சேர்ந்து தாக்கியதாகத் தெரிகிறது. இந்நிலையில் ஒளிப்பதிவாளர் தன் மீதான தாக்குதல் குறித்து ராமேஸ்வரம் போலீசில் புகார் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் லீனா மணிமேகலை, ஷோபா சக்தி, மற்றும் மேனேஜர்களை காவல்நிலையத்திற்கு அழைக்க அவர்கள் மறுத்து வாக்குவாதப் பட்டிருக்கிறார்கள். லீனா போலீசாருடன் விவாதித்ததை தனது செல்போனில் ஒரு போலீஸ் அதிகாரி பதிவு செய்ய அவரது செல்போனையும் பிடுங்கியிருக்கிறார் லீனா , கடுப்பான போலீசார் ஷோபா சக்தியையும், லீனா மணிமேகலையையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல படத்தின் மேனேஜர்களோ தப்பி ஓடிவிட்டனர். தனது மேலிட தொடர்புகளை பயன்படுத்தி லீனாவும் ஷோபா சக்தியும் இப்போது விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இப்போது வரை படப்பிடிப்பில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வில்லை.

Exit mobile version