நாட்டின் உறுதித் தன்மை சீர்குலைப்பதற்கு சில தரப்பினர் முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
சில அரசியல் சக்திகள் தங்களது மறைமுக நோக்கங்களை பூர்த்தி செய்து கொள்வதற்காக சதித் திட்டங்களில் இறங்கியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பொலிஸாருடன் மோதலை ஏற்படுத்தி மீண்டும் நாட்டில் பதற்ற நிலையை உருவாக்க சிலர் முயற்சிப்பதாகவும், 71, 83 மற்றும் 88,89 ஆண்டு கிளர்ச்சிகளைப் போன்றே மீண்டும் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாகம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசாங்கம் மக்கள் மீது பலவந்தமாக எதனையும் திணிக்காது எனவும், மக்களின் தேவைகளை அறிந்து அதற்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சுதந்திர வலய போராட்டம் ஓர் சதித் திட்டமாகவே கருதப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏனெனில் ஊழியர் அல்லாதவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளதென அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.