Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

‘தொப்புள் கொடியை’ ‘கணவன் மனைவி உறவால் பிரதியிட முயலும் விக்னேஸ்வரனும் தப்பியோடிய சீமானும்

vikiதமிழக அரசியல் வாதிகள் ஈழப் பிரச்சனையைத் தமது நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று இரண்டாவது தடவையாக வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியது பல சர்ச்சைகளைக் கிளப்பிவிட்டடிருந்தது. அதிலும் இலங்கை அரசாங்கத்தோடு பேசித் தீர்த்துக்கொள்வோம் என்று போராடும் மக்கள் கூட்டத்தின் மத்தியிலிருந்து ஒருவர் தேர்தலில் வாக்குப் பெறும் காலத்தில் கூறியிருக்கிறார் என்றால் அது அந்த மக்கள் கூட்டத்தின் இதுவரை கால இழப்பையும் அவமானப்படுத்துவதாகும்.. விக்னேஸ்வரனின் நேர்காணலைக் கேட்டதும் சீமான் கொந்தளித்துப் போனார். விக்னேஸ்வரன் பேச்சைக் கேட்டதும் பிபிசி தமிழோசைக்கு ஏற்பட்ட உற்சாகத்தில் சீமானையே அழைத்து நேர்காணல் கண்டனர். இலங்கையின் நில ஆகிரமிப்பு, பாலியல் வன்கொடுமைகள், திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு போன்ற இன்னோரன்ன பிரச்சனைகளை எல்லாம் கண்டுகொள்ளாத பிபிசி தமிழோசையை விக்னேஸ்வரனின் நேர்காணல் சூடேற்றிவிட்டது.

முப்பது வருடங்களுக்கு மேலாக முள்வேலி முகாம்களுக்கு இலங்கை அரசு அடைத்து வைத்திருப்பதைப் போன்றே ஈழத்தமிழ் அகதிகளைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் தமிழ் நாட்டு அரசின் எல்லைக்குள் இருந்து அந்த அரசிற்கு ஆதரவளித்த சீமான் தொலை பேசினார். நேர்காணலை எதிர்கொள்ள முடியாமல் பாதியிலே துண்டித்துக்கொண்டார்.

முன்னதாக பாசிஸ்ட் நரேந்திர மோடி இந்தியத் தொலைக்காட்சி நேர்காணலிலிருந்து தப்பியோடியதப் போன்றே சீமானும் தமிழோசையிடமிருந்து இணைப்பைத் துண்டித்துக்கொண்டு தப்பியோடிவிட்டர்.
தமிழக் அரசியல் வாதிகள் ஈழத் தமிழர் பிரச்சனையைத் தங்கள் சுய நலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதாக விக்னேஸ்வரன் இந்துப் பத்திரிகைக்கு ஆங்கிலத்தில் நேர்காணல் வழங்கிவிட்டு அதற்கு அந்தப் பத்திரிகையில் மறுப்புத் தெரிவிக்காமல் தமிழில் யாழ்ப்பாணத்தில் சந்திப்பு ஒன்றின் போது மழுப்பலான மறுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் பொதுவாகவே மக்களின் அவலங்களை தமது அரசியல் இலாபத்திற்காகப் பிழைப்புவாத அரசியல் வாதிகள் பயன்படுத்தவில்லை என்று மறுப்பானார்களானால் அவர்கள் கோரமான சந்தர்ப்பவாதிகளே.

ஆனால் தமது கொல்லைப் புறத்தில் சாரிசாரியாக மக்கள் கொன்று போடப்படும் போது மௌனமாகப் பார்த்துக்கொண்டிருங்கள் என்று தொனியில் எமது பிரச்சனைகளை நாமே பேசித் தீர்த்துக்கொள்வோம் என்று கூறியிருக்கிறார் சி.வி.விக்னேஸ்வரன் .

அது தவிர இது கணவன் மனைவி பிரச்சனை போன்றது மற்றவர்கள் தலையிடத் தேவையில்லை என்றெல்லாம் கூறி தனது வர்க்க விசுவாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இலங்கைப் பாசிச அரசைச் சிங்கள மக்களே ஒரு குடும்பமாக கருதமாட்டார்கள்.

தமிழ் நாட்டிற்குச் சென்ற சிங்கள் யாத்திரீகர்களை வை.கோ, சீமான் போன்ற பிழைப்பு வாதிகள் கற்களால்தான் அடித்திருக்கிறர்கள். ராஜபக்ச அரசோ அதே சிங்கள மக்களைத் துப்பாக்கியால் சுட்டிருக்கிறது. ஆக, விக்னேஸ்வரன் ராஜபக்ச பாசிஸ்டுக்களைத் தமது குடும்பமாகக் கருதுவது அவர் சார்ந்த கொழும்பு மேட்டுக்குடி வர்க்கத்தின் இயல்பான சுபாவம்.

தமிழ் நாட்டிலோ வை.கோ, சீமான், நெடுமாறன் போன்றவர்கள் வயிற்றுப் பிழைப்பு நடத்துவதற்கு ஈழத் தமிழர்களின் பிரச்சனையை விட்டால் விட்டால் வேறு வழிகள் இல்லை.
இந்திய அரசிற்கோ இந்தவகையானவர்களை அகற்றிவிட்டால் வேறு முற்போக்கு ஜனநாயக சக்திகள் அந்த இடத்தை நிரப்ப முன்வந்துவிடுவார்கள் என்ற அச்சம். ஆக கோமாளித் தனமான உணர்ச்சிப் பிழம்புகளை முன்னயில் வைத்திருக்கவும் அவர்களின் ஊடாகப் புதிய அரசியலின் வருகையை தடுக்கவும் இந்திய அரசு செயற்படுகிறது.

இந்த தமிழ்த் தேசிய வகயறாக்களின் ‘தவறுகள் அல்லது குற்றங்களைப் பயன்படுத்தி அவர்களை மட்டுமன்றி ஈழத் தமிழர் குறித்து சிந்திக்கும் அனைவரையுமே அழித்தொழிக்க ஒரு மனிதர் இந்திய அதிகார வர்க்கத்திற்குத் தேவை.
இந்த நிலையில் தான் ‘எனக்கு அரசியல் தெரியாது, சட்டம் மட்டும்தான்’ என்ற அரசியலோடு களத்தில் இறக்கப்பட்டவர் விக்னேஸ்வரன்.
‘தொப்புள்கொடி உறவுகளை’ கணவன் மனைவி உறவால் பிரதியீடு செய்ய முற்படுகிறார் வினேஸ்வரன்.
‘தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் எமது அவலங்களைத் தங்களது தேவைக்காகப் பயன்படுத்துவதைக் கண்டிக்கிறோம், நாம் சிங்கள ஒடுக்கப்படும் மக்களோடு இணைந்து உரிமைகளைப் போராடிப் பெற்றுக்கொள்வோம்.அதற்கு நீங்கள் ஆதரவாக இருந்தல் போதுமானது ‘ என்ற முழக்கத்துடன் புதிய தலைமை உருவாகும் வரைக்கும் விக்னேஸ்வரன்கள் சிங்கள அதிகாரவர்க்கத்தோடு இணைந்து இலங்கையிலுள்ள அனைத்து ஒடுக்கப்படும் மக்களுக்கும் எதிராகச் செயற்படுவார்கள்.

Exit mobile version