இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடந்துள்ள சந்திப்பின்போது இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியும், மறைந்த சந்திரசேகரன் உருவாக்கிய மலையக மக்கள் முன்னணியும் இன்னும் சில மலையகத் தமிழ்க் கட்சிகளும் தமது கட்சியுடன் கூட்டுசேர்ந்து தமது கட்சியின் சேவல் சின்னத்திலேயே போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தமிழோசையிடம் கூறினார்.
மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளரும் இலங்கையின் தாதா அரசியல் தலைவர்களில் ஒருவருமான தொண்டைமான், குடும்ப அரசியலின் மூன்றாவது வாரிசு.