மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்ற நவ-தாரளவாத அளவுகோல் இன்று மேற்கு நாடுகளில் காணப்படும் பொருளாதார உறுதியை அளவிடுவதற்குப் பயன்படுகிறது. பொருளாதாரப் பலமிக்கதாகக் குறிப்பிடப்படும் ஏழு நாடுகளில் (G7)பிரித்தானியப் பொருளாதாரம் மிக வேகமாக சரிவடைந்து வருவதாக The Organisation for Economic Co-operation and Development (OECD) என்ற அமைப்பு கூறியுள்ளது. பிரித்தானியப் பொருளாதாரம் ஸ்பெயின் மற்றும் கிரேக்கப் பொருளாதாரம் அளவிற்கு மீட்சிபெற முடியாத நிலைக்குத் தள்ளப்படும் என பல்வேறு ஆய்வாளர்கள் முன்னமே குறிப்பிட்டதை இந்த அமைப்பு உறுதிப்படுத்துகிறது.
பிரித்தானியாவின் மொத்த உள் நாட்டுப் பொருளாதார உற்பத்தி இந்த ஆண்டு 0.7 வீதத்தால் சரிவடையும் என இந்த அமைப்புக் குறிப்பிட்டுள்ளது.