மொரவெவ, ஹெலெம்பவெவ, ஜனகபுர, கஜபாபுர, நாயாறு, கொக்கிளாய் பகுதியில் குடியேற்றப்பட்ட சிங்களக் குடும்பங்களுக்கே இன்று காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன.
வெலிஓயா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள மணலாறு பிரதேசத்தில் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் எல் வலயம் என்ற குறியீட்டுடன் சிங்களக் குடியேற்றங்களை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
மணலாறின் பெரும்பாலான தமிழ் கிராமங்களில் இருந்து 1984ம் அண்டு சிறிலங்கா படையினரால் தமிழர்கள் அடித்து விரப்பட்ட நிலையில், அங்கு சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்பட்டன.
பின்னர், விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களால் சிங்களக் குடியேற்றவாசிகள் கணிசமாக இடம்பெயர்ந்து சென்ற போதிலும், போர் முடிவுக்கு வந்த பின்னர் சிறிலங்கா படையினர் மற்றும் அரசாங்கத்தின் ஆதரவுடன் மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர்.
தமிழர்கள் விரட்டப்பட்ட பின்னர், மண்கிண்டிமலை (ஜனகபுர), நாயாறு, கொக்கிளாய் கிராமங்களில் குடியேற்றப்பட்ட சிங்களக் குடும்பங்களுக்கே இன்று காணிகள் சொந்தமாக வழங்கப்படவுள்ளன.