Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தொடரும் தமிழக மீனவர் படுகொலைகளுக்கு எதிராக…புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்!

அண்மையில் வேதாரண்யம் மீனவர் ஜெயக்குமார் இலங்கைக் கடற்படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டிருப்பது மட்டுமின்றி, தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருவதை எதிர்த்தும், இதற்குத் துணைபோகும் இந்திய அரசை எதிர்த்தும் 27.1.2011 அன்று மாலை தஞ்சை ரயிலடியில் ம.க.இ.க., வி.வி.மு., பு. மா.இ.மு., ஆகிய அமைப்புகள் இணைந்து விண்ணதிரும் முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

ம.க.இ.க. கிளைச் செயலர் தோழர் இராவணன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் வி.வி.மு. பட்டுக்கோட்டை வட்ட அமைப்பாளர் தோழர் மாரிமுத்து, ம.க.இ.க. மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

வட்டார மேலாதிக்க அரசான இந்தியாவின் துணையுடன் ஈழத் தமிழினப் படுகொலையை நடத்திய சிங்கள இனவெறி பாசிச கும்பல், இந்தியத் தமிழனையும் வேட்டையாடி வருவதையும், பாசிச ராஜபக்சே கும்பலுக்குத் துணை நிற்கும் இந்திய மேலாதிக்க அரசை வீழ்த்தாமல், தொடரும் இத்தகைய தாக்குதல்களை முறியடிக்க முடியாது என்பதையும், கடற்பகுதிகளைப் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் விழுங்குவதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள கடற்கரை மேலாண்மைச் சட்டம் எனும் நில அபகரிப்புச் சட்டம் மீனவர் வாழ்வுரிமைக்குப் பேரபாயமாக நிற்பதையும் உணர்த்திய இந்த ஆர்ப்பாட்டம், மக்களைப் போராட்டத்துக்கு அறைகூவுவதாக அமைந்தது.

– தகவல்: ம.க.இ.க., தஞ்சை.

தகவல் : புதியஜனநாயகம்

Exit mobile version