இதே வேளை இலங்கை அரசின் நவ தாராளவதப் பொருளாதாரத் திட்டங்கள் சமூக விரோதமானவை.
பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டிகளை ஹம்பாந்தோட்டையில் நடத்துவதற்கான வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்காக 8585 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
2018ம் ஆண்டு பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியை இலங்கையில் நடாத்துவதற்கு பல்வேறு வழிகளில் முயற்சிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரச்சார நடவடிக்கைகளுக்காக 264 மில்லியன் ரூபா பிரிட்டன் நிறுவனத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் விளையாட்டுப் போட்டியை நடாத்துவது தொடர்பிலான கைநூல் ஒன்றினை அச்சிட்டு வெளியிடுவதற்காக 46.2 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.
இனப்படுகொலையையும் இனச்சுத்திகரிப்பையும் மட்டுமல்ல இது போன்ற மக்களைப் பட்டினிபோட்டு நடக்கும் திருட்டுகளையும், இணக்க அரசியலுக்குள் குழி தோண்டிப் புதைத்துவிடும் நடவடிக்கை இப்போது புலம்பெயர் நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.
இலங்கை அரசின் உளவியல் யுத்தத்தின் ஒரு பகுதியே இது.