Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தேவையான நேரங்களில் ராஜபக்சவைப் பாதுகாக்கும் ரனில்

mahinda_ranilபிரிட்டனுக்கான முன்னாள் தூதுவர் கிறிஸ் நோனிஸின் நடவடிக்கையில் தவறு இருப்பதாகவும், அவர் உடனடியாக மன்னிப்புக்கோர வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பிரிட்டனுக்கான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இந்த சுற்றுப்பயணத்தின் இடையில் முன்னாள் தூதுவர் கிறிஸ் நோனிஸ் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்பு பர்மிங்காமில் நடைபெற்றிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸின் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சியின் ஆதரவைப் பெறும் நோக்கில் கிறிஸ் நோனிஸ், ரணிலைச் சந்தித்திருந்தார். எனினும் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, கிறிஸ் நோனிஸ் மீதுதான் தவறு என்று குற்றம் சாட்டிய ரணில், அவர்தான் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, ஷேணுகா செனவிரத்தின இலங்கையின் மூத்த ராஜதந்திரிகளில் ஒருவர். வெளிநாட்டமைச்சின் செயலாளர். அவரை தகாத வார்த்தைகளால் திட்டுவதற்கோ, மரியாதைக்குறைவாக நடத்துவதற்கோ எந்தவொரு ராஜதந்திரிக்கும் உரிமை கிடையாது. இவற்றுக்கு மேலாக அவர் ஒரு பெண். எனவே ஒழுங்கீனமாக நடந்து கொண்டது தொடர்பில் கிறிஸ் நோனிஸ் உடனடியாக ஷேணுகாவிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று ரணில் வலியுறுத்தியிருந்தார்.
கிரிஸ் நோனிஸ் என்ற அதி உயர் ராஜதந்திரி சஜின் வாஸ் என்ற ரவுடி அமைச்சரால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து ரனின் மூச்சு விடவில்லை. கிரிஸ் நோனின் – சஜின் வாஸ் விவகாரம் இப்போது மகிந்த குடும்பத்தின் குடும்ப விவகாரமாக உருவெடுத்துள்ள நிலையில் மகிந்த அரசால் எதிர்க்கட்சித் தலைவராகப் பேணப்படுவதாகக் கருதப்ப்படும் ரனில் விக்ரமசிங்கவின் கருத்து பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version