Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்றால் ஜீ.எஸ்.பி. சலுகைத் திட்டம் ரத்து செய்யப்படும்

எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் சுதந்திரமானதும், நீதியானதுமாக நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்றால் இலங்கைக்கான ஜீ.எஸ்.பி. சலுகைத் திட்டம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரஸல்ஸில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு, ஐரோப்பிய ஒன்றியம் எழுத்து மூலம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் மீள வழங்கப்பட வேண்டுமாயின் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அழுத்தங்களோ இடையூறுகளோ இன்றி சுதந்திரமான முறையில் மக்கள் தமக்கு பிடித்த வேட்பாளருக்கு வாக்களிக்கக் கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்.

தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டால் முடிவுகள் வெளியிடப்படும் வரையில் காத்திராது இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வன்னிப் படுகொலைகள் நடந்தபோதெல்லாம்  ஐரோப்பாவின்   கண்துடைப்பு  எச்சரிக்கைகள் எந்தப் பயனுமற்றுப் போனது நினைவுகூரத் தக்கது.

Exit mobile version