இலங்கை மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று நடைபெறவுள்ள மாகாணசபைகளுக்கான தேர்தலில் 5 மாவட்டங்களிலிருந்தும் 106 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 34 இலட்சத்து 8,182 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். 1209 வாக்களிப்பு நிலையங்களில் இவர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று நண்பகல் வரை 30 சதவீதமான வாக்குகல் பதிவாகியுள்ளதாக பப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெறும் மாகாண சபைத் தேர்தல்களில் கண்டியில் 40 சதவீதமானோரும், மத்தளையில் 25 சதவீதமானோரும், புத்தளத்தில் 25 சதவீதமானோரும், குருநாகலையில் 30 சதவீதமானோரும், நுவரெலியாவில் 20 சதவீதமானோரும் இன்று நண்பகல் வரை வாக்களித்துள்ளதாக பப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது