ராஜபக்ச அரசாங்கத்தில் இராணுவப் பேச்சாளரகப் பணிபுரிந்த ரூவான் வணிகசூரியவுடன் இணைந்து ராஜித சேனாரத்ன நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் ராஜபக்சவின் இறுதி நேர இராணுவத் தலையீடு குறித்துக் கருத்து வெளியிட்டிருந்தமை தெரிந்ததே. ரூபவாகினியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ரதன தேரர் இதே கருத்தைத் தெரிவித்தார்.
இறுதி நேரத்தில் அமெரிக்கா நேரடியாகத் தலையிட்டதாக ஊடகவியலாளர் குசால் பெரார கூறினார்.
அவரின் தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை எனினும் பாரதூரமானவை. குசால் பெரேராவின் தகவல்கள்:
மகிந்த தோல்வியடைவது உறுதியானதும் தேர்தல் ஆணையகத்துள் புகுந்த அதிரடிப்படையினரால் வாக்கு எண்ணும் பணி தாமதப்படுத்தப்பட்டது. அதே வேளை இராணுவத் தளபதி தயா ரத்னாயக்கவைத் தொடர்புகொண்ட மகிந்த கொழும்பு முழுவதையும் இராணுவக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவர முயற்சித்தார். இதனை அறிந்த பிரித்தானிய மற்றும் அமெரிக்கத் தூதுவர்கள் மகிந்தவைச் சந்தித்து இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு கூறினர்.
அதே வேளை மகிந்தவைத் தொடர்பு கொண்ட அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி மகிந்த இரணுவத்தைப் பயன்படுத்தினால் இலங்கையில் நிலை கொண்டுள்ள அமெரிக்க இராணுவத்தை தாம் செயலில் ஈடுபடுத்துவோம் என்று எச்சரித்ததார். இதனை அடுத்து தயா ரத்னாயக்கவைத் தொடர்புகொண்ட அமெரிக்கத் தூதுவர் இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு எச்சரித்தார். இவ்வேளையில் தெருவிற்கு வந்த இராணுவத்தினர் உள்ளே அழைக்கப்பட்டனர்.
இனப்படுகொலையின் பின்புலத்தில் செயற்பட்ட நாடுகளில் அமெரிக்கா பிரதானமானது. மேலுள்ள தகவல்களை உறுதிப்படுத்துவதற்கு இனியொருவிடம் குறிப்பான பொறிமுறைகள் இல்லை எனினும் இவை வாசகர்களின் பார்வைக்கு விடப்படுகின்றது.
இலங்கை மீது அமெரிக்காவினதும் மேற்கினதும் நேரடித் தலையீடு ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தும். வட-கிழக்கில் தமிழர்கள் அழிக்கப்பட்டு இலங்கை முழுவதும் அழிவுக்கு உள்ளாகும் சூழல் தோன்றும்..
இலங்கையில் நிலைகொண்டுள்ள அமெரிக்க இராணுவம்:
இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் அமெரிக்க இராணுவமும் ராஜபக்ச பாசிஸ்டுக்களின் இராணுவ வியாபாரமும்
பலாலி இராணுவ முகாமில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகள்
இலங்கையில் குடிகொள்ள ஆரம்பித்துள்ள அமெரிக்க இராணுவமும் அமெரிக்கத் தீர்மானமும்