Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தேர்தல் ஆணையாளர் வீட்டுக்காவலில்? : முடிபுகள் திரிபுபடுத்தப்பட்டவை?

தேர்தல் ஆணையாளர் தேர்தல் முடிபுகள் எதனையும் வெளியிட மறுத்துவிட்டார் என்றும் இதனை ஒட்டி அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் உறுதிப்படுத்தப்ப்பட்டாத தகவல்களை ஆதாரம் காட்டி கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை வெளியான தேர்தல் முடிபுகள் அனைத்தும் இலங்கை இராணுவத்தின் கஜபா ரெஜிமன்டின் நிர்வாகப் பிரிவினராலேயே வெளியிடப்படுவதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இவ்வேளையில் தேர்தல் முடிபுகள் தவறானவையாயின் அவற்றைத் தான் வெளியிட மாட்டேன் என தேர்தல் ஆணையாளர் தேர்தலின் முன்னமே கூறியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதே வேளை, நடமாடும் சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில் கொழும்பு சினமன் லேக் ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேக்காவின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர விடுதியான சினமன் லேக் ஹோட்டலை இன்று அதிகாலை சுற்றிவளைத்த இராணுவத்தினர் அவரை அப்பகுதியிலிருந்து வெளியில் செல்ல முடியாத வகையில் தடுத்து வைத்திருந்தனர். இந்த நிலையில் குறித்த றோட்டலுக்குள் நுழைந்த படையினர் ஜெனரல் சரத்பொன்சேக்காவிற்கு பாதுகாப்பு அளித்து வந்த அவரது மெய்ப்பாதுகாவலர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இராணுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version