இதற்கு முன்னர் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களின் முடிவடையும் இறுதி தினத்தில் பிற்பகல் தேர்தல் ஆணையாளர் தேர்தல் முடிவுகளை வெளியிடும் நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பப்படுவது வழமையாகும். எனினும், இம்முறை அவ்வாறான நடைமுறை பின்பற்றப்படவில்லை.
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தேர்தல் ஆணையாளரின் உரையை ஊடகங்கள் ஒளிபரப்ப நேர்ந்தது. நேரடியாக ஒளிபரப்புவதற்கும் பதிவு செய்வதற்கும் பதிவு செய்து ஒளிபரப்புவதற்கும் இடையே பாரிய வித்தியாசங்கள் இருக்கின்றன.
நேரடியாக ஒளிபரப்பப்படும் போது சம்பந்தப்பட்ட நபர் தெரிவிக்கும் கருத்துக்கள் அப்படியே, அந்த கனமே ஒளிபரப்பாவதுடன் அதில் திருத்தங்கள் எதுவும் செய்ய முடியாது. எனினும், பதிவு செய்யப்பட்ட உரையைத் தொகுத்து ஒளிபரப்ப முடியும்.
இதனை யதார்த்தமாக கூறுவதாயின் இந்தத் தேர்தல் முடிவுகள் உண்மையானது அல்ல என சுருக்கமாகவோ அல்லது எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் என்னால் எதனையும் செய்ய முடியாது என நேரடி ஒளிபரப்பில் தேர்தல் ஆணையாளர் நேரடியாகவே மக்களுக்குக் கூறமுடியும். எனினும், பதிவு செய்யப்பட்ட உரையை தேவைக்கேற்ற வகையில் தொகுக்க முடியும்.
இலத்திரனியல் ஊடகத்துறையை அறிந்த ஊடகவியலாளர் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில், தேர்தல் ஆணையாளரின் உரை குறித்து மிகவும் ஆச்சரியம் வெளியிட்டுள்ளனர். அதேபோல், தேர்தல் திணைக்களத்திற்கு தகவல் தொழில்நுட்ப உதவிகளை கொழும்பு பல்கலைக்கழகமே இதுவரை வழங்கி வந்தது.
எனினும், இம்முறை தனியார் தொழில்நுட்ப நிறுவனமொன்று இதற்காகப் பயன்படுத்தப்பட்டமையும் சந்தேகத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.